வேலைசெய்துகொண்டே மேற்்படிப்பைத் தொடர வாய்ப்பு

தொழில்நுட்பத் திறனாளர்கள் பற்றாக்குறையைச் சமாளிக்க புதிய திட்டம்

மாதங்கி இளங்­கோ­வன்

வேலை பார்த்­துக்­கொண்டே தக­வல் தொடர்பு தொழில்­நுட்­பத் துறை­யில் பட்­டப்­ப­டிப்­பைத் தொட­ரும் வாய்ப்பைப், பல­துறை தொழில்­நுட்­பக் கல்­லூ­ரி­யில் பட்­ட­யக் கல்­வியை முடித்த 400 பேர் பெற்­றுள்­ள­னர். இதன் மூலம் அவர்­கள் அடுத்த இரண்­டாண்­டு­களில் இந்­தத் துறை­யில் பட்­டம்­பெ­று­வர். அதற்­கான புதிய திட்­டம் நேற்று தொடங்­கி­வைக்­கப்­பட்­டது.

'ஃபியூஷன்' என்­னும் அந்­தப் புதிய திட்­டத்தை என்­சி­எஸ் நிறு­வ­னமும் தக­வல் தொடர்பு, ஊடக மேம்­பாட்டு ஆணை­ய­மும் இணைந்து தொடங்கி வைத்­தன.

ஃபியூஷன் திட்­டத்­தின்கீழ், தக­வல் தொடர்பு தொழில்­நுட்­பத் துறை­யில் பட்­ட­யக் கல்­வியை முடித்­த­வர்­க­ளுக்கு, என்­சி­எஸ் நிறு­வ­னம், மென்­பொ­ருள் உரு­வாக்­கம் இணையப் பாதுபாப்பு ஆகிய துறை­களில் பணி­யில் அமர்த்தி பயிற்சி அளிக்­கும்.

அத்துடன், சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பட்டக் கல்வி பயில்வதற்கு ஆகும் முழுக் கட்டணத்தையும் என்சிஎஸ் ஏற்றுக்கொள்ளும்.

தி ஆர்ட்ஸ் ஹவுஸில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், என்சிஎஸ் நிறு­வ­ன­மும் தக­வல் தொடர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­ய­மும் தங்­கள் கூட்டு முயற்­சிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்­நி­கழ்ச்­சிக்குச் சிறப்பு விருந்­தி­ன­ராக வருகை தந்திருந்த தொடர்பு, தக­வல் மூத்த துணை அமைச்­சர் டான் கியட் ஹாவ்­, "சிங்­கப்­பூ­ரில் தொழில்­நுட்­பத் துறை­யில் திறன்­வாய்ந்­த­வர்­களை ஈர்ப்பது நமக்கு முக்­கியக் குறிக்­கோ­ளாக உள்ளது.

"நம் நாட்­டிலும், சிங்கப்பூர் கால்­ப­திக்­கும் நாடுகளிலும் சாதிப்பதற்கு தொழில்நுட்பத் திறனாளர்கள் மிக முக்­கி­யம்," என்று வலி­யு­றுத்­தி­னார்.

பல்­வேறு கல்­விப் பாதை­களைத் தேர்ந்தெடுத்துள்ள இளம் திற­னா­ளர்­க­ளுக்கு வாய்ப்­ப­ளிக்­கும் 'ஃபியூ­ஷன்', அவர்­க­ளு­டைய திறன்­களுகளை மெரு­கூட்­டு­வ­தோடு வேலையை ஆரம்­பிப்­ப­தற்கு நல்ல ஊக்­கு­விப்­பை­யும் தரு­வ­தாக கூறி­னார் திரு டான்.

பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­களில் தக­வல் தொடர்பு தொழில்­நுட்­பத் துறை­யில் பட்­ட­யம் பெற்ற மாண­வர்­கள் இத்­திட்­டத்­தி­னால் என்சி எஸ் நிறு­வ­னத்­தில் இணையப் பாது­காப்பு, மென்­பொ­ருள் உருவாக்கம் போன்ற துறை­களில் பணி­பு­ரி­வ­தோடு வல்­லு­நர்­க­ளின் வழி­காட்­டு­தலுடன் பயிற்­சி­யும் பெற­வுள்­ள­னர்.

இம்­மா­ண­வர்­கள் சிங்­கப்­பூர் தொழில்­நுட்பக் கழ­கத்­தி­லும் சிங்­கப்­பூர் நிர்­வாகப் பல்கலைக்கழ­கத்­தி­லும் பட்­ட­யக் கல்­வியை மேற்­கொள்­வ­தற்கு நிதி­யும் தரு­கின்­றது என்சிஎஸ் நிறு­வ­னம்.

தொழில்­நுட்பக் கல்­விக்­க­ழ­கத்­தில் பயி­லும் 400 மாண­வர்­கள் இது­போன்ற திட்­டத்­தின் மூலம் அடுத்த ஆண்டு நன்­மை­ய­டைந்து தக­வல் தொழில்­நுட்­பம் தொடர்பான பட்­ட­யக் கல்­வியை மேற்­கொண்டவாறு பணி­பு­ரி­ய­வுள்­ள­னர்.

மொத்­தம் 800 பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் ஏற்­கெனவே 'நியூக்ளியஸ்' என்­னும் திட்­டத்­தின்­கீழ் பணி­யாற்­றிக்­கொண்டே படிப்பைத் தொடர்கின்றனர்.

என்சிஎஸ் ­நி­று­வ­னத்­தில் தற்­போது இணையப் பாது­காப்பு ஆலோ­ச­க­ராக பணி­பு­ரி­கி­றார் விஷ்ணு லோக­நாதன், 27.

பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நூக்­கி­லி­யஸ் திட்­டத்­தி­னால் இங்கு வேலை­வாய்ப்பு பெற்ற விஷ்ணு, அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளுக்கு இணையப் பாது­காப்­புத் துறை­யில் மேன்­மை­ய­டைய சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் சில பாடங்­களைப் படித்து சான்­றி­தழ்­க­ளை­யும் என்சிஎஸ் நிறு­வ­னத்­தின் நிதி ஆத­ர­வு­டன் பெறு­வார்.

இந்த நிறு­வ­னத்­தில் பணி­பு­ரி வ­தால் பல புது­மை­யான அனு­ப­வங்­க­ளைப் பெற்­றுள்­ள­தாக கூறிய விஷ்ணு, நல்ல முன்­மா­தி­ரி­க­ளின் வழி­காட்­டு­தல், குழு உறுப்­பி­னர்­ க­ளு­டன் சேர்ந்து செய்­யும் வேலை அனு­ப­வம் ஆகி­யவை அவ­ரு­டைய கற்­ற­லுக்கு மேன்­மே­லும் உத­வி­ய­தாக சொன்­னார்.

என்சிஎஸ் நிறு­வ­னம் மொத்­தம் 1,000 மாண­வர்­க­ளுக்குத் தொழில்­நுட்பம் சார்ந்த வேலை அனு­ப­வங்­க­ளை­யும் அளிக்­க­வுள்­ளது.

இந்த நிறு­வ­னத்­தின் மூன்று திட்­டங்­க­ளான, 'பியூ­ஷன்', 'நியூக்ளியஸ்', 'ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர்' ஆகியவை பணி­யாற்­றிக்­கொண்டே மேற்படிப்பைத் தொடர வழிவகுக்கும் திட்டங்களாகும். இதன்மூலம் தொழில்­நுட்பத் துறை­யில் 1,600 வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கும்.

mathangielan@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!