பூச்சிக்கொல்லி காரணத்தால் திரும்பப் பெறப்படும் நூடல்ஸ் தயாரிப்பு

1 mins read
215863ad-0d1c-4d5e-ba7d-d6442f5f0acf
'கொரியன் ஸ்பைசி சிக்கன்', 'கொரியன் ஸ்பைசி சூப்' ஆகிய இரண்டிலும் ஒருவகை பூச்சிக்கொல்லி இருப்பதாக உணவு அமைப்பு தெரிவித்தது. படம்: சிங்கப்பூர் உணவு அமைப்பு -
multi-img1 of 2

உடனே சமைத்துச் சாப்பிடக்கூடிய இந்தோனீசிய 'மீ செடாப்' நூடல்ஸ் தயாரிப்பு உணவுப்பொருள்கள் இரண்டில் பூச்சிக்கொல்லி கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால் அவை திரும்பப் பெற்றுக்கொள்ளப்படுவதாக சிங்கப்பூர் உணவு அமைப்பு இன்று வியாழக்கிழமை தெரிவித்தது.

'கொரியன் ஸ்பைசி சிக்கன்', 'கொரியன் ஸ்பைசி சூப்' ஆகிய இரண்டிலும் ஒருவகை பூச்சிக்கொல்லி இருப்பதாகத் தெரிவித்த அமைப்பு, உணவுப்பொருள்கள் தொடர்பில் தான் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இது தெரியவந்ததாகக் குறிப்பிட்டது.

இதற்கிடையே, சிங்கப்பூர் மற்றும் இணையவழி பேரங்காடிகளில் இவை விற்கப்படுவதாக அறியப்படுகிறது.

பூச்சிக்கொல்லி இருப்பதாகக் கூறப்படும் 'கொரியன் ஸ்பைசி சிக்கன்' பாக்கெட்டுகளில் காலாவதி தேதி மே 21, 2023 என்றும் 'கொரியன் ஸ்பைசி சூப்' பாக்கெட்டுகளின் காலாவதி தேதி மார்ச் 17, 2023 என்றும் குறிப்பிடப்பட்டிருக்கும்.