சிங்கப்பூரில் இந்திய செல்வந்தர் முகேஷ் அம்பானியின் குடும்ப அலுவலகம்: தகவல்

ஆசியாவின் ஆகப் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி தனது குடும்ப வர்த்தகத்தின் அலுவலகத்தைச் சிங்கப்பூரில்திறக்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

ரிலயன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான திரு அம்பானி தனது சிங்கப்பூர் அலுவலகத்தை நிர்வகிக்கவும் ஆள் சேர்க்கவும் ஒரு நிர்வாகியைத் தேர்தெடுத்துவிட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்ததாக அறியப்படுகிறது.

தங்கள் குடும்ப வர்த்தக விவகாரங்களை நிர்வகிப்பதற்கான குடும்ப அலுவலகங்களை பல செல்வந்தர்கள் அண்மைய காலங்களில் சிங்கப்பூரில் அமைத்து வருகின்றனர். அப்படி அமைத்த ஹெட்ஜ் ஃபண்ட் கோடீஸ்வரர் ரே டாலியோ, கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் போன்றோரின் வரிசையில் தற்போது திரு அம்பானியும் இணைந்துள்ளார்.

பல குடும்ப அலுவலகங்கள் இங்கு அமைவதற்கு சிங்கப்பூரின் குறைந்த வரிகளும் பாதுகாப்பும் முக்கிய காரணிகளாக அமைந்து வருகின்றன.

2021 ஆம் ஆண்டின் இறுதியில் இதுபோன்ற கிட்டத்தட்ட 700 அலுவலகங்கள் சிங்கப்பூரில் செயல்பட்டு வருவதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் மதிப்பிட்டுள்ளது, இது கடந்த ஆண்டு 400 ஆக இருந்தது.

திரு அம்பானியின் மொத்த மதிப்பு $83.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (S$124.5 பி.) கணிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!