தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சட்டவிரோத இணைய ஒளிபரப்புக் கருவிகள் விற்பனை; சந்தேகத்தின்பேரில் 17 பேர் கைது

1 mins read
99ebb3ad-3caa-408a-bed3-3f2563ef7199
சிம் லிம் ஸ்குவேர் கடைகளில் $500,000 மதிப்புள்ள சட்டவிரோத இணைய ஒளிபரப்புக் கருவிகள் பிடிபட்டன. படம்: சிங்கப்பூர்க் காவல் படை -

இணை­யத்­தில் ஒளி­ப­ரப்பு செய்ய உத­வும் கரு­வி­களை சட்­ட­வி­ரோ­த­மாக விற்­பனை செய்த சந்­தே­கத்­தின் பேரில் 17 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். இவர்­களில் நால்­வர் பெண்­கள், 13 பேர் ஆண்­கள்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் 24 வய­திற்­கும் 61 வய­திற்­கும் இடைப்­பட்­ட­வர்­கள். இவர்­கள் விற்­பனை செய்த கரு­வி­க­ளின் மதிப்பு ஏறக்­கு­றைய 500,000 வெள்ளி.

சென்ற செவ்­வாய்க்­கி­ழமை, குற்­ற­வி­யல் விசா­ர­ணைத் துறை அதி­கா­ரி­கள் சிம் லிம் ஸ்கு­வேர் கடைத்­தொ­கு­தி­யின் சில சில்­லறை விற்­ப­னைக் கடை­களில் சோத­னை­நடத்தினர். இதில் 2.500க்கும் மேற்­பட்ட சட்­ட­வி­ரோத இணைய ஒளி­பரப்­புக் கரு­வி­கள் பிடி­பட்­டதாகக் காவல்துறை தெரிவித்தது.

இந்தக் கருவிகள் மூலம் பய­னா­ளர்­கள் இணை­யத்­தில் சட்­ட­வி­ரோ­தத் தக­வல்­க­ளைப் பார்க்க இய­லும்.

பதிப்­பு­ரிமை பெற்ற தக­வல்­களைச் சட்­ட­வி­ரோ­த­மாக நகல் எடுத்­தல், கையா­ளு­தல், தர­வி­றக்­கம் செய்­தல், விநி­யோ­கித்­தல், இதற்­கான கரு­வி­களை விற்­பனை செய்­தல் போன்ற நட­வ­டிக்­கை­களுக்கு $100,000 வரை­யி­லான அப­ரா­தமோ ஐந்­தாண்டு வரை­யி­லான சிறைத்­தண்­ட­னையோ இரண்­டுமோ விதிக்­கப்­ப­ட­லாம்.

அறிவுசார் சொத்­து­ரி­மை­களை மீறு­வோர்­மீது கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று காவல்­துறை எச்­ச­ரித்­தது.