உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் மின்சாரத் தடை

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் மின்சாரத் தடை

1 mins read
58271a27-6f60-4d30-98a8-96d16af216c5
படம்: சிங்கையின் மங்கை/பேஸ்புக் -
Google News Preferred Icon

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் இன்று காலை மின்சாரத் தடை ஏற்பட்டது. இதனால் சோதனை செய்வதில் தாமதம் நேர்ந்தது. பயணிகள் துவாஸ் சோதனைச் சாவடியைப் பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

நள்ளிரவு ஒரு மணிக்கு தடை ஏற்பட்டது. இன்று அதிகாலை 5.30 மணியளவில் தடை சரிசெய்யப்பட்டதாக குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் அதன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பல மணிநேரம் காத்திருந்ததாக பயணிகள் தங்களது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். பயணிகள் துவாஸ் சோதனைச் சாவடிக்கு திருப்பிவிடப்பட்டதால், அங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.