தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனநலம் தொடர்பில் உதவி நாட... மனநலன் பேணும் பொறுப்பு அனைவருடையது

6 mins read
273ac92e-11de-4c63-b902-5376ae3913ec
-

காயத்­திரி காந்தி

உலக மன­நல தினம் ஆண்­டு­தோ­றும் அக்­டோ­பர் 10ஆம் தேதி­யன்று அனு­ச­ரிக்­கப்­ப­டு­கிறது. மன­ந­லம் தொடர்­பான விழிப்­பு­ணர்வை அதி­க­ரிக்­க­வும் மன­நல ஆத­ரவு தொடர்­பான முயற்­சி­களை முடுக்­கி­வி­டு­வதும் இந்­த தினத்­தின் முதன்மை நோக்­க­மா­கும். மன­ந­லம் தொடர்­பான தங்­க­ளின் பய­ணத்­தைப் பற்றி இன்­றைய இளை­யர் முர­சில் பகிர்ந்­து­கொள்­கின்­ற­னர் சிலர்.

மன­நல ஆலோ­சனை நாடு­வது

இயல்­பா­ன­தாக வேண்டும்

வழக்­க­நிலைத் தேர்­வில் தேர்ச்சி பெறா­த­தால், உயர்­நிலைப் பள்­ளி­யில் கூடு­தலாக ஓராண்­டைக் கழிக்க வேண்­டிய நிலை லஷ்னா நலேந்­தி­ரனுக்கு ஏற்­பட்­டது. உடன் பயின்­ற­வர்­கள் தங்­க­ளின் கல்­விப் பய­ணத்­தின் அடுத்த நிலைக்­குச் சென்­ற­னர். ஆனால் அவ்­வாறு செல்ல முடி­யாத லஷ்னா துவண்டு போனார். தன் மன­ந­ல­னைச் சீராக்க முயற்சி எடுத்­தாக வேண்­டும் என உணர்ந்­தார்.

"எனக்கு முதல் தடை­யாக இருந்­ததே நான்­தான் என்­பதை உணர்ந்­தேன். என் மன­ந­ல­னைப் பேணிக்காப்­ப­தற்­கான முதல் படியை எடுத்து வைத்­தேன். அதைப் பற்றி பேசு­வது மிகக் கடி­ன­மாக இருந்­தது," என்­றார்.

தனக்கு உதவி தேவை என்­பதை ஒரு­வர் உணர்­வ­தும் தன் உணர்­வு­க­ளைச் சமா­ளிக்­கும் வழி­மு­றை­யைக் கண்­ட­றி­வதும் முக்­கி­யம் என்று குறிப்­பிட்­டார் லஷ்னா.

மன உளைச்­ச­லி­லி­ருந்து மீண்­டு­வர, தன் குடும்­பத்­தா­ரும் முக்­கி­யப் பங்­காற்றி­ய­தாக லஷ்னா பகிர்ந்­து­கொண்­டார்.

"நான் தனி­யாக இருக்க விரும்­பு­வதை என் பெற்­றோர் உணர்ந்து, எனக்­காக அமை­தி­யான சூழலை உரு­வாக்­கித் தந்­தார்­கள். நான் என் வழக்­க­நி­லைத் தேர்வு முடி­வு­க­ளால் சோகத்­தில் இருந்­த­போது அவர்­க­ளின் பேச்சு ஆறு­த­லா­க­வும் ஆத­ர­வா­க­வும் இருந்­தது," என்று லஷ்னா கூறி­னார். பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் சமூக அறி­வி­யல் துறை­யில் பயி­ல­வேண்­டும் என்று விரும்­பிய லஷ்னா, தன் மன­ந­ல­னுக்கு முன்­னு­ரிமை தரத் தொடங்­கி­னார்.

நண்­பர்­க­ளி­டம் பேசு­வது, மன­ந­லன் பேணும் பழக்­கங்­க­ளைக் கடைப்­பி­டிப்­பது ஆகி­ய­வற்­றை­விட மன­நல ஆலோ­ச­க­ரின் உத­வியை நாடு­வதே மன அழுத்­தத்­தைச் சமா­ளிக்­கப் பெரி­தும் உத­வும் என்­கி­றார் லஷ்னா.

"நான் என்னை முன்­னி­லைப்­ப­டுத்­திக்­கொண்­டேன். என் மன­ந­ல­மும் மேம்பட்டது. என் படிப்­பில் சிறந்து விளங்கி உயர்­நிலைப் பள்­ளி­யில் முதல் ஐந்து மாண­வர்­களில் ஒரு­வ­ரா­கச் தேர்ச்சி பெற்­றேன்," என்­றார் லஷ்னா.

இன்று தொண்­டூ­ழி­யத் தொடர்­பு­கள் நிர்­வா­கி­யா­கப் பணி­பு­ரிந்­த­வாறு சிறு வணி­கம் ஒன்­றுக்கு உரி­மை­யா­ள­ரா­க­வும் திகழ்­கி­றார் 27 வயது லஷ்னா. உதவி தேவைப்­படும்­போது மன­நல ஆலோ­ச­கரை நாடும் சூழல், சமு­தா­யத்­தி­லும் இளையர்களிடத்தி லும் இயல்­பான ஒன்­றாக இருக்­க­வேண்­டும் என்­பது இவ­ரின் திட­மான கருத்து.

பெற்­றோர், நண்­பர்­கள் ஆத­ரவு முக்கியம்

இளை­யர்­கள் தங்­கள் படிப்பு தொடர்­பில் மன அழுத்­தத்­தை­யும் பெற்­றோ­ரின் எதிர்­பார்ப்பு­க­ளை­யும் சமாளிக்க வேண்டி உள்ளது. சில நேரங்களில் நண்­பர்­களு­ட­னும் பெற்­றோ­ரு­ட­னும் மனம்­விட்டுப் பேசுவதுகூட சிர­ம­மா­க­லாம். இந்­நி­லை­யில், மன உளைச்­ச­லுக்கு ஆளா­கும் இளை­யர்­கள் தங்­க­ளுக்கு உதவி தேவை என்­பதை முத­லில் உண­ர­வேண்­டும். தாங்­கள் சந்­திக்­கும் இன்­னல்­கள், சவால்­கள் போன்­ற­வற்­றைச் சமா­ளிக்க மன­நல உதவி நாடு­வது முக்­கி­யம் என உள­வி­ய­லா­ளர் புனிதா குண­சே­க­ரன் தெரி­வித்­துள்­ளார்.

"சிங்­கப்­பூர் இளை­யர்­களில் 18 விழுக்­காட்­டி­னர் மனச்­சோர்­வால் பாதிக்­கப்­ப­டு­வதாக ஆய்­வு­கள் கூறு­கின்­றன. இன்­றைய இளை­யர்­க­ளுக்­குச் சமூ­கத் தொடர்­பு­கள் மிக­வும் முக்­கி­யம். எனவே அவர்­கள் தங்­கள் பிரச்­சி­னை­க­ளை­யும் உணர்­வு­க­ளை­யும் பகிர்ந்­து­கொள்ள நண்­பர்­க­ளையே இயல்­பாக நாடு­கின்­ற­னர். அந்­நே­ரத்­தில் நண்­பர்­கள் தோள்­கொ­டுத்து ஆத­ர­வ­ளிப்­பது அவ­சி­யம்," என்று கூறி­னார் திருவாட்டி புனிதா. அதே­வே­ளை­யில், இளை­யர்­கள் மன­ந­ல­னுக்­குப் பெற்­றோ­ரும் அவர்­க­ளது பங்கை ஆற்ற வேண்­டும் என்று திரு­வாட்டி புனிதா வலி­யு­றுத்­தினார்.

பள்­ளித் தேர்­வு­கள், பெற்­றோர் மற்­றும் ஆசி­ரி­யர்­க­ளின் எதிர்­பார்ப்­பு­கள், நண்­பர்­களு­ட­னான உறவு போன்ற பல்­வேறு அம்­சங்­களில் இளை­யர்­கள் சவால்­க­ளைச் சந்­திக்­கின்­ற­னர் என்­ப­தைப் பெற்­றோர் ஏற்­றுக்­கொள்ள வேண்­டும் என்று கூறி­னார் திரு­வாட்டி புனிதா.

"பிள்­ளை­க­ளு­டன் நல்­ல­தோர் உறவை ஏற்­ப­டுத்­திக்­கொள்­வ­தி­லும் அவர்­க­ளு­டன் மனம்­விட்­டுப் பேசு­வ­தி­லும் கவ­னம் செலுத்து­வது பெற்­றோ­ருக்­கும் உத­வும்," என்று அவர் குறிப்­பிட்­டார்.

மன­ந­ல­னுக்­கும் குடும்­பச் சூழ­லுக்­கும் தொடர்­புண்டு

சிங்­கப்­பூர் உட்­பட ஆறு நாடு­கள் தொடர்­பாக இவ்­வாண்டு நடத்­தப்­பட்ட ஆய்­வில், தங்­க­ளின் மன­ந­லனை நிர்­ண­யிக்­கும் முக்­கிய அம்­சங்­க­ளாக குடும்­பத்­தை­யும் உறவு­களை­யும் கரு­து­வ­தாக 51% சிங்­கப்­பூ­ரர்­கள் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

இளை­யர் முர­சுக்கு அளித்த பேட்­டி­யில், தன் குடும்­பத்­தில் ஏற்­படும் பிரச்­சினை­களே தனது மன­ந­ல­னைப் பெரி­தும் பாதிப்­ப­தா­கப் பெயர் குறிப்­பிட விரும்­பாத ஆட­வர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

குடும்­பச் சூழல் கார­ண­மாக 14 வய­தி­லி­ருந்து தான் மன அழுத்­தத்­துக்கு ஆளா­ன­தாக அவர் கூறினார்.

தன்­னு­டைய பெற்­றோ­ரும் மன­ந­லத்­தின் முக்­கி­யத்­து­வத்தை ஆரம்­பத்­தில் உண­ர­வில்லை என்று அவர் குறிப்­பிட்­டார்.

மன­நல நிபு­ணரை நாட போதிய பணம் இல்­லா­த­தால் இது­போன்ற சேவை­களை இல­வ­ச­மாக வழங்­கும் நிறு­வ­னங்­களை அணுகி, 16வது வய­தில் மன­ந­லன் பேணு­வ­தற்­கான அந்த முதல் படியை அவர் எடுத்து வைத்­தார்.

சில மாதங்­களில் தன்­னுள் நிக­ழும் மாற்­றத்தை உணர ஆரம்­பித்த நிலை­யில் தன் தாயா­ரி­டம் மனந்­தி­றந்து பேசி­னார். அதன் பிறகு அவருடைய பெற்­றோ­ருக்கு மன உளைச்­சல் குறித்த விழிப்­பு­ணர்வு அதி­க­ரித்­தது. தனது உணர்­வு­க­ளைப் புரிந்து­கொள்ள அவர்­கள் முயற்சி எடுத்­த­தைப் பார்த்­துத் தான் நெகிழ்ந்து போன­தாக அந்த ஆட­வர் குறிப்­பிட்­டார்.

மன­நல உதவி நாடு­வ­தில் தவ­றில்லை

கவலை, பதற்­றம், தனிமை போன்ற மன­ந­லன் தொடர்­பான உணர்­வு­களைத் தாங்­கள் அனு­ப­வித்­துள்­ள­தாக சிங்­கப்­பூ­ரில் 11 முதல் 18 வய­துக்­குட்­பட்ட 3,336 இளை­யர்­க­ளி­டம் நடத்­தப்­பட்ட ஆய்வு ஒன்­றில், மூன்­றில் ஒரு­வர் கூறி­யி­ருந்­தார். மேலும், மற்ற வய­தி­ன­ரு­டன் ஒப்­பி­டு­கை­யில் 14 முதல் 16 வயது வரை­யி­லான இளை­யர்­க­ளுக்கு ஏற்­ப­டக்­கூ­டிய மன­ந­லப் பாதிப்­பு­கள் மேலும் கடு­மை­யானவை என்று தெரி­ய­வந்­தது.

இளை­யர்­க­ளுக்கு உத­வும் வகை­யில் உள­வி­ய­லா­ளர்­கள், மன­நல மருத்­து­வர்­கள் மட்­டு­மின்றி மன­நல சமூ­கப்­பணி நிபு­ணர்­களை­யும் உள்­ள­டக்­கிய பல்­துறை அணுகு­முறை வேண்­டும் என்று அந்த ஆய்வு அறி­வு­றுத்­து­கிறது.

அவ்­வாறு மன­நல உதவி வழங்­கும் அமைப்­பு­களில் 'மென்­டல் ஆக்ட்' என்ற லாப நோக்­கற்ற சமூக அமைப்­பும் ஒன்­றா­கும். இது மன­ந­லச் சேவை­கள் மற்­றும் திட்­டங்­களை ஐந்து ஆண்­டு­க­ளாக வழங்கி வரு­கிறது.

"எங்­கள் சமூக ஊட­கத் தளங்­கள் வழி­யா­க­வும் இளை­யர் இந்­திய அமைப்­பு­கள் மூல­மா­க­வும் மன உளைச்­ச­லால் பாதிக்­கப்­படும் இளை­யர்­களை நாங்­கள் அணுகு­கி­றோம்," என்று கூறி­னார் 'மென்­டல் ஆக்ட்' அமைப்­பின் நிர்­வாக இயக்­கு­னர் தேவா­னந்­தன்.

இளை­யர்­க­ளு­டன் உரை­யா­டி­ய­தன்­வழி, இன்­ன­மும் சில குடும்­பங்­களில் மன­ந­லம் பற்­றிய தவ­றான சிந்­தனை இருப்­பதைத் உணர்ந்­த­தா­கக் கூறி­னார் தேவா­னந்­தன்.

இத­னால் இளை­யர்­கள் தகுந்த உத­வியை நாடத் தயங்­க­லாம். இவ்­வாறு உதவி நாடத் தயங்­கும் இளை­யர்­க­ளுக்கு வெளிப்­புற நடை­யு­டன் கூடிய ஆலோ­சனை சிகிச்சை அமர்­வு­கள், ஆத­ரவு தரு­வ­தற்­காக இல்ல வரு­கை­கள் போன்ற சேவை­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன என்று அவர் குறிப்­பிட்­டார். 'கஃபே' போன்ற இளை­யர்­கள் விரும்­பும் இடங்­களில் அமர்­வு­கள் நடை­பெ­றும் என்­றார் தேவா­னந்­தன்.

விழிப்­பு­ணர்வு போதாது

மன­ந­லம் பற்­றிய தவ­றான சிந்­த­னை­களை மாற்­றும் பொறுப்பு நம் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் உண்டு என்று கூறும் ஊட­கத்­துறைத் தலைமை எழுத்­தா­ள­ரும் இயக்கு­ந­ரு­மான 27 வயது ஸ்டேசி தன்யா ஷாமினி, 12வது வய­தி­லி­ருந்து மன அழுத்­தத்­துக்கு ஆளா­கி­ய­வர்.

கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக 'பாலி­சிஸ்­டிக் ஓவரி சிண்ட்­ரம்' (பிசி­ஓ­எஸ்) பிரச்சினையுடன் போராடி வரும் இவர், 12 வய­தி­லி­ருந்தே 'எண்­டோ­மெட்­ரி­யோ­ஸிஸ்' (endometriosis) பிரச்­சி­னைக்­கும் ஆளா­ன­வர்.

மருத்­து­வக் கார­ணங்களால் 14 வயதிலி­ருந்தே கருத்­தடை மாத்­தி­ரை­களை எடுத்து­வந்தார். அதன் விளை­வா­க அவருக்கு உடல் எடை அதி­க­ரித்தது. உடல் எடை குறித்­த விமர்சனங்கள் இவரை மிக­வும் புண்­படுத்­தின. மேலும், பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் பயின்ற காலத்­தில் உடல்­நிலை கார­ண­மா­க அவருக்கு ஏற்­பட்ட முகப்­பரு பிரச்­சி­னை­யா­லும் மேலும் மன அழுத்­தத்­திற்கு ஆளா­னார் ஸ்டேசி.

"நான் எதிர்­நோக்­கிய சவால்­க­ளைச் சமா­ளிக்க, மன­நல உதவி நாடி­யது எனக்­குப் பெரி­தும் உத­வி­யது. மன அழுத்­தம் என்­னை முடக்கிவிடக்கூடாது என்­ப­தில் நான் உறு­தி­யாக இருந்­தேன்," என்று கூறி­னார் ஸ்டேசி.

உள­வி­யல் துறை­யில் பட்­டப்­ப­டிப்பை முடித்­துள்ள ஸ்டேசி, இளை­யர்­க­ளுக்கு மன­நல ஆத­ர­வ­ளிப்­ப­தில் நண்­பர்­க­ளுக்­கும் பெற்­றோ­ருக்­கும் பெரும் பங்­குண்டு என்­றார்.

"மன­ந­லப் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தங்­களின் பிள்ளை ஆளா­கி­யுள்­ள­தன் அறி­கு­றி­க­ளைப் பெற்­றோர் கண்­ட­றி­ய­வும் அவற்­றைச் சமா­ளிக்­க­வும் பயி­ல­ரங்­கு­களும் கருத்­த­ரங்­கு­களும் மேலும் அதி­கம் தேவை," என்றார் ஸ்டேசி.

 சிங்கப்பூர் அபய ஆலோசனைச்

சங்கம் (SOS): 1767

வாட்ஸ்அப் தொடர்பு: 9151 1767

Tinkle Friend (7-12 வயது)

1800 2744 788

 மனநலக் கழகத்தின்

'சேட்' சேவை (13-25 வயது)

chatline@mentalhealth.sg

 மனநல உள்ளாய்வு

நிலையத்திற்கான (SAMH)

சிங்கப்பூர் சங்கம்: 1800 283 7019

 SAMH SAY-IT:

9179 4087 / 9179 4085 அல்லது

samhsayit@samhealth.org.sg

 Club HEAL: 6899 3463

TOUCHLINE: 1800 377 2252

அல்லது hello@help123.sg

 சமுதாய, குடும்ப மேம்பாட்டு

அமைச்சின் குடும்பச் சேவை

நிலையங்களையும் உதவிக்கு

நாடலாம்