பிரசவத்துக்குப் பிறகும் எஸ்ஐஏ பெண் சிப்பந்திகள் விமானத்தில் பணியாற்றலாம்

பிரசவத்துக்குப் பிறகும் எஸ்ஐஏ பெண் சிப்பந்திகள் விமானத்தில் பணியாற்றலாம்

1 mins read
50286161-6031-4398-acbd-0a1208d10e4c
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் அதன் பெண் விமானச் சிப்பந்திகள் தாய்மையடைந்தவுடன் அவர்களின் குத்தகையை ரத்து செய்யும் நீண்டகால வழக்கத்தை நிறுத்தியுள்ளது.

விமானச் சிப்பந்திகள் தாய்மை அடைந்தவுடன் தரையில்இருந்து பார்க்கும் வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அவர்கள் தங்கள் பிரசவத்துக்குப் பிறகு மீண்டும் விமானச் சிப்பந்தி பணிக்குத் திரும்பலாம் என்றும் நிறுவனம் தெரிவித்தது.

இந்தப் புதிய கொள்கை கடந்த ஜூலை 15ஆம் தேதியிலிருந்து நடப்பில் உள்ளது என்பதைத் தெரிவிக்கும் சுற்றறிக்கையை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் உறுதிப்படுத்தியது.

அதில் விமானச் சிப்பந்திகள் தாய்மை அடைந்தவுடனும் அவர்களின் பிரசவத்துக்குப் பிறகு ஆதரவளிக்க எஸ்ஐஏ முடிவு செய்துள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பழைய முறையை நியாயமற்றது என்று பெண்கள் உரிமைக் குழுக்கள் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குறைகூறி வந்துள்ளன.

விமானத் துறையில் ஏற்பட்டுள்ள ஆள் பற்றாக்குறையே கொள்கை மாற்றத்துக்குக் காரணம் என்று கவனிப்பாளர்கள் கூறினர்.

புதியவர்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்கு பதிலாக தற்போது பணியில் உள்ளவர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவே இப்படி செய்யப்பட்டுள்ளது என்றும் கருத்துரைத்தனர்.