சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து எட்டாவது மாதமாக உயர்ந்துள்து. செப்டம்பர் மாதம் 752,305 வெளிநாட்டினர் இங்கு வருகையளித்தனர். ஆகஸ்ட் மாதம் இந்த எண்ணிக்கை 728,744ஆக இருந்தது. எனினும், கொவிட்-19 தொற்று காலத்துக்கு முன் 2019 செப்டம்பரில் இந்த எண்ணிக்கை 1.5 மில்லியனாக பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து ஆறுவது மாதமாக இந்தோனீசிய சுற்றுப்பயணிகள் முதலிடத்தைப் பிடித்தனர். 115,433 பேர் இந்தோனீசியாவிலிருந்து இங்குப் பயணம் மேற்கொண்டனர். அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. சென்ற மாதம் 83,265 இந்தியச் சுற்றுப்பயணிகள் சிங்கப்பூருக்கு வந்தனர். மூன்றாவது நிலையில் உள்ள மலேசியாவிலிருந்து 79,6892 சுற்றுப்பயணிகள் இங்கு வருகை புரிந்தனர்.
சீனாவிலிருந்து 13,601 சுற்றுப்பயணிகள் மட்டுமே சென்ற மாதம் இங்கு வந்தனர். 2017லிருந்து 2019ஆம் ஆண்டு வரை சீனச் சுற்றுப்பயணிகள் ஆக அதிக அளவில் சிங்கப்பூருக்கு வந்தனர்.
இவ்வாண்டு இதுவரை மட்டுமே 3.7 மில்லியன் சுற்றுப்பயணிகள் சிங்கப்பூருக்கு வந்துள்ளனர். முன்னதாக நான்கு மில்லியன் முதல் ஆறு மில்லியன் சுற்றுப்பயணிகள் சிங்கப்பூருக்கு வருகை அளிப்பார்கள் என சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் மதிப்பிட்டது.


