மலேசியக் கோழி ஏற்றுமதித் தடை அகல்கிறது: சிங்கப்பூருக்கு கொண்டு வரப்படும் கோழி வகைகள் என்னென்ன?

மலேசியக் கோழி ஏற்றுமதித் தடை அகல்கிறது: சிங்கப்பூருக்கு கொண்டு வரப்படும் கோழி வகைகள் என்னென்ன?

1 mins read
9af11d53-50c6-441f-b086-07c2a099d0c4
தேக்கா சந்தையில் உள்ள கோழி இறைச்சிக் கடை. படம்: ஷின் மின் -

சிங்கப்பூர் அதன் கோழி இறைச்சி விநியோகத்தில் பெரும்பாலும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்கிறது. இதில் 34 விழுக்காடு கோழி இறைச்சி மலேசியாவிலிருந்து கொண்டுவரப்படுகிறது.

மலேசியா, கோழி இறைச்சி ஏற்றுமதித் தடையை இன்று (அக்டோபர் 11) நீக்குகிறது.

சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்படும் கோழி இறைச்சி வகைகள் இவை:

பிராய்லர் கோழி குறிப்பாக இறைச்சி உற்பத்திக்காக பிராய்லர் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. பேரங்காடிகளில் பொதுவாக விற்கப்படும் கோழிகள் இவை.

நாட்டுக் கோழி மலேசியா, இந்தோனீசியா போன்ற நாடுகளுக்கே உரிய கோழி வகைகளாக நாட்டுக் கோழிகள் உள்ளன. பிராய்லர் கோழிகளைவிட இவை பொதுவாக சிறியதாக இருந்தாலும் இவற்றின் விலை சற்று கூடுதலாக இருக்கும்.

கறுப்புக் கோழி நாட்டுக் கோழிகளைப் போலவே கறுப்புக் கோழிகளும் சிறியதாக இருக்கும். மருத்துவக் குணங்கள் இருப்பதாகக் கூறப்படும் இவற்றின் விலை கூடுதலாக இருக்கும்.

உயிர்க் கோழிகள் பொதுவாக மலேசியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு இங்கு அறுக்கப்பட்டு பதப்படுத்தப்படும்.

குளிர்விக்கப்பட்ட கோழிகள் பதப்படுத்தப்பட மாட்டா. 4க்கும் 7 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்ட வெப்பநிலையில் இவை கொண்டு வரப்படுகின்றன.

உறைந்த கோழிகள் -18க்கும் -12 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்ட வெப்பநிலையில் கொண்டு வரப்படுகின்றன.