3.7 மி. பயணிகள் வருகை

3.7 மி. பயணிகள் வருகை

2 mins read
8b497688-14d0-48c3-b325-4dc64983e754
சாங்கி விமானநிலையம் 3ஆம் முனையத்தில் தங்களது உடைமை களுக்காகக் காத்திருக்கும் பயணிகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ருக்கு வரும் அனைத்­து­ல­கப் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை எட்­டா­வது மாத­மாக செப்­டம்­ப­ரி­லும் தொடர்ந்து அதி­க­ரித்து கொவிட்-19க்குப் பிந்­திய மற்­றொரு மாதாந்­திர சாதனை நிகழ்த்­தப்­பட்­டுள்­ளது.

செப்­டம்­பர் மாதத்­தில் மட்­டும் சிங்­கப்­பூ­ருக்கு 752,305 பய­ணி­கள் வந்­த­னர்.

ஆகஸ்ட் மாதம் இந்த எண்­ணிக்கை 728,744 ஆக இருந்­த­தாக சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கம் தெரி­வித்­துள்­ளது.

இருந்­த­போ­தி­லும் 2019ஆம் ஆண்டு செப்­டம்­ப­ரில் இங்கு வந்த 1.5 மில்­லி­யன் பேர் என்ற எண்­ணிக்­கை­யைக் காட்­டி­லும் இவ்­வாண்­டின் செப்­டம்­பர் எண்­ணிக்கை குறை­வு­தான்.

இவ்­வாண்­டில் சிங்­கப்­பூ­ருக்கு வருகை தந்த நாட்­டி­ன­ரின் பட்­டி­ய­லில் தொடர்ந்து ஆறா­வது மாத­மாக இந்­தோ­னீ­சியா முத­லி­டத்­தி­லும் இந்­தியா இரண்­டாம் இடத்­தி­லும் இருந்­தன.

மூன்­றா­வது இடத்­தில் மலே­சி­யா­வும் நான்­கா­வது இடத்­தில் ஆஸ்­தி­ரே­லி­யா­வும் வந்த நிலை­யில் சீனா­விலிருந்து வந்­தோர் எண்­ணிக்கை குறை­வா­ன­தால் ஐந்­தாம் இடத்­தில் அந்த நாடு இருந்­தது.

இந்­தோ­னீ­சி­யா­வி­லி­ருந்து செப்­டம்­பர் மாதம் 115,433 பேர் வந்த நிலை­யில் அதற்கு முந்­திய ஆகஸ்ட் மாதம் அந்த எண்­ணிக்கை 108,252 ஆக இருந்­தது.

அதே­போல இந்­தி­யா­வி­லி­ருந்து ஆகஸ்ட் மாதம் 79,249 பேர் வந்த நிலை­யில் செப்­டம்­பர் மாதம் அந்த எண்­ணிக்கை 83,265க்கு அதி­க­ரித்­தது.

மலேசியாவிலிருந்து ஆகஸ்ட் மாதம் 63,905 பேரும் செப்டம்பர் மாதம் 79,692 பேரும் சிங்கப்பூர் வந்தனர்.

ஆஸ்திரேலியாவிலிருந்து ஆகஸ்ட் மாதம் 56,917 பயணிகளும் அதற்கு அடுத்த மாதம் 79,150 பயணிகளும் வருகை புரிந்தனர்.

2017ஆம் ஆண்டுமுதல் 2019ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரின் ஆகப் பெரிய பயணிகள் வருகைச் சந்தை யாக விளங்கி வந்த சீனாவிலிருந்து செப்டம்பர் மாதம் 13,601 பேர் சிங்கப்பூருக்கு வந்தனர்.

இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் மாதம் இங்கு வந்த 14,735 பேரைக் காட்டிலும் குறைவு.

2019ஆம் ஆண்டு செப்­டம்­பர் மாதம் சீனா­வி­லி­ருந்து 248,568 பேர் வந்­தி­ருந்த நிலை­யில் இவ்­வாண்டு செப்­டம்­ப­ரில் அங்கிருந்து வந்­தோர் எண்­ணிக்கை பெரிய அள­வில் சரிந்­தது.

மொத்­த­மாக, இந்த ஆண்டில் இதுவரை 3.7 மில்­லி­யன் பேர் வெளி­நா­டு­களில் இருந்து சிங்­கப்­பூர் வந்­த­னர்.

4 மில்­லி­யன் முதல் 6 மில்­லி­யன் வரையிலான பயணிகள் இவ்வாண்டு சிங்கப்பூருக்கு வரலாம் என கடந்த ஜூலை மாதம் சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கம் கூறியிருந்தது.

இதுவரை இங்கு வந்த மொத்த பய­ணி­களில் 2.2 மில்­லி­யன் பேர் இவ்­வாண்­டின் மூன்­றாம் காலாண்­டில் வந்­த­னர்.

இரண்­டாம் காலாண்­டில் இந்த எண்­ணிக்கை 1.3 மில்­லி­ய­னா­க­வும் முத­லாம் காலாண்­டில் 246,145 ஆக­வும் பதி­வாகி இருந்­தது.

கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்கில் விதிக்­கப்­பட்­டி­ருந்த எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் இவ்­வாண்டு ஏப்­ரல் மாதம் தளர்த்­தப்­பட்ட பிறகு அனைத்துலகப் பய­ணி­க­ள் சிங்கப்பூருக்கு வருவது அதி­க­ரிக்­கத் தொடங்­கி­யது.

சிங்கப்பூருக்கு வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு; இரண்டாமிடத்தில் இந்தியா