செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
8ab524d9-e965-4422-868c-1cb2c652879f
-

கூட்டுரிமை வீடுகளின் விற்பனை நான்கு மாதத்திற்குப் பிறகு ஏற்றம்

கொண்­டோ­மி­னி­யம் எனப்­படும் கூட்­டு­ரிமை வீடு­க­ளின் மறு­விற்­பனை செப்­டம்­பர் மாதம் அதி­க­ரித்­துள்­ளது. புதிய தனி­யார் வீடு­க­ளின் எண்­ணிக்கை குறிப்­பிட்ட வரம்­புக்­குள் இருந்­த­தைத் தொடர்ந்து நான்கு மாதங்­க­ளாக வீழ்ச்சி கண்டு­ வந்த மறு­விற்­பனை வீடு­க­ளின் எண்­ணிக்கை மறு­

ப­டி­யும் உய­ரத் தொடங்கி இருப்­ப­தாக எஸ்­ஆர்­எக்ஸ், 99.co ஆகிய சொத்­துச் சந்தை இணை­யத்­த­ளங்­க­ளின் முன்­னோடி மதிப்­பீ­டு­கள் தெரி­விக்­கின்­றன. செப்­டம்­ப­ரில் கைமா­றிய கூட்­டு­ரிமை வீடு­க­ளின் எண்­ணிக்கை 1,331. இது ஆகஸ்ட் மாதம் விற்­பனை ஆன 1,317 வீடு­க­ளைக் காட்­டி­லும் 1.1 விழுக்­காடு அதி­கம். இருப்­பி­னும் கடந்த ஆண்­டின் செப்­டம்­பர் மாதத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் இது 22.8 விழுக்­காடு வீழ்ச்சி. கூட்­டு­ரிமை வீடு­க­ளின் மறு­விற்­பனை விலை­கள் தொடர்ந்து 26வது மாத­மாக செப்­டம்­ப­ரி­லும் ஏற்­றம் கண்­டன. புற­ந­க­ரில் தனி­யார் வீடு­க­ளுக்­கான தேவை வலு­

வ­டைந்­த­தைத் தொடர்ந்து அந்த மாதத்­தில் 1.7 விழுக்­காடு விலை ஏற்­றம் பதி­வா­னது.

ஓமிக்ரான் தொற்றும் விதம் ஆய்வு

ஓமிக்­ரான் வகை கொவிட்-19 கிருமி தொற்­றும் விதம் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் தொற்­று­டன் வாழும் உரு­மாற்­றத்­திற்கு வழி­செய்து இருப்­ப­தாக டியூக்-என்­யு­எஸ் மருத்­து­வக் கல்வி நிலை­ய­மும் தொற்­று­நோய்களுக் கான தேசிய நிலை­ய­மும் நடத்­திய ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது.

"ஓமிக்­ரா­னின் அதி­கம் பர­வும் தன்­மை­யின் விளை­வாக அதி­க­மான மக்­கள் இரு­த­ரப்பு நோய் எதிர்ப்பு ஆற்­ற­லைப் பெற்­றுள்­ள­னர். அந்த ஆற்­றல் மறு­தொற்று ஏற்­ப­டு­வ­தி­லி­ருந்து அவர்­க­ளைக் காப்­பாற்­று­கிறது," என்று தொற்று­ நோய்களுக்கான தேசிய நிலை­யத்­தின் தொற்­று­நோய் ஆராய்ச்­சிப் பிரிவு இயக்­கு­நர் பேரா­சி­ரி­யர் டேவிட் லை தெரி­வித்­துள்­ளார். "அடிப்­ப­டைத் தடுப்­பூ­சி­க­ளை­யும் பூஸ்­டர் தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுக்­கொண்­டோ­ரைத் தொற்­றும் ஓமிக்­ரான் வகைக் கிரு­மி­யின் ஆற்­றல் மிக­வும் இலே­சா­னது. மேலும், அவர்­க­ளின் நுரை­யீ­ர­லில் தொற்றை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கும் அவர்­க­ளுக்கு உயிர்­வாயு உதவி தேவைப்­ப­டு­வ­தற்­கு­மான தேவை ஏற்­ப­டாத வகை­யில் கிரு­மி­யின் வலு குறைந்­தி­ருக்­கும்," என்­றும் பேரா­சி­ரி­யர் லை தெரி­வித்­தார்.

100ல் 15 பேருக்கு மறுதொற்று

சிங்­கப்­பூ­ரில் இதற்கு முன்­னர் கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்ட 100ல் 15 பேருக்கு மீண்­டும் தொற்று ஏற்­பட்டு உள்­ள­தாக சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்து உள்­ளார். இந்த விகி­தம் இனி­வ­ரும் நாள்­களில் உயர்ந்­தால் புதிய தொற்­றலை ஏற்­படும் சாத்­தி­யம் இருப்­ப­தா­க­வும் அவர் எச்­ச­ரித்­துள்­ளார்.

நோய்த்­தொற்று நில­வ­ரம் குறித்து நேற்று முன்­தி­னம் விளக்­கிய அவர், "மறு­தொற்று விகி­தத்­தின் அடிப்­ப­டை­யில் நாட்­டில் மற்­றொரு கொவிட்-19 பேரலை உரு­வா­கிறதா என்­பதை அவர்­கள் உற்­று­நோக்கி வரு­கின்றனர். தற்­போ­தைய நில­வ­ரப்­படி இந்த விகி­தம் 15 விழுக்காடாக உள்­ளது. அதா­வது 100ல் 15 பேருக்கு மறு­தொற்று ஏற்­பட்டு உள்­ளது. இது 50 விழுக்­கா­டாக, அதிகரித்தால் இன்­னொரு கொவிட்-19 அலை ஏற்­ப­டு­வதாக அர்த்­தம்," என்­றார் திரு ஓங்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை சிங்­கப்­பூ­ரில் புதி­தாக கொவிட்-19 கிருமி தொற்­றி­யோ­ரின் எண்­ணிக்கை 4,000 என பதி­வா­னது. இந்த எண்­ணிக்கை செவ்­வாய்க்­கி­ழமை (நேற்று) 9,000க்கும் 10,000க்கும் இடை­யில் அதி­க­ரிக்­கும் சாத்­தி­யம் உள்­ள­தா­கக் கூறிய அவர், ஒவ்­வொரு வார­மும் செவ்­வாய்க்­கி­ழ­மை­தான் பய­மு­றுத்­தும் நாளாக இருந்து வரு­கிறது என்­றார். வார­இ­று­தி­யில் பொது­மக்­கள் அதிக சமூக நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வ­தால் அதன் தாக்­கம் வழக்­க­மாக செவ்­வாய்க்­கி­ழமை வெளிப்­ப­டு­கிறது.இந்நிலை யில் திங்கட்கிழமை 4,719 பேர் பாதிக்கப்பட்டனர்.