கடல்துறை கரிம ஒழிப்புக்கும் மின்னிலக்கத் திட்டங்களுக்கும் $22 மில்லியன் ஒதுக்கீடு

கடல்துறை கரிம ஒழிப்புக்கும் மின்னிலக்கத் திட்டங்களுக்கும் $22 மில்லியன் ஒதுக்கீடு

2 mins read
86a13bcc-d433-4c51-8c2c-7c2c0780c4d5
-

அடுத்த தலை­மு­றைக்­கான பல­நோக்கு துறை­மு­கங்­க­ளுக்­கான மாற்று எரி­சக்தி தொடர்­பான ஆய்­வும் கடல்­துறை எரி­பொ­ரு­ளாக அ­மோ­னி­யா­வைப் பயன்­ப­டுத்­த­லாமா என்­பது பற்­றிய யோச­னை­யும் அடுத்த கட்ட ஆராய்ச்­சியை நெருங்க உள்­ளன. இதற்­காக அடுத்த ஐந்­தாண்­டு­களில் செல­விட $22 மில்­லி­யன் ஒதுக்­கப்­பட்டு உள்­ளது.

இந்த அம்­சங்­கள் தொடர்­பா­க­வும் இத­ரத் திட்­டங்­க­ளி­லும் ஆழ­மான ஆராய்ச்­சிப் பணி­களை மேற்­கொள்ள சிங்­கப்­பூர் கடல்­துறை கல்­விக்­க­ழ­கம் (எஸ்­எம்ஐ) இங்­குள்ள இதர இரு பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளு­டன் இணைந்து பணி­யாற்­றும்.

கரிமத்­தைக் குறைப்­பது தொடர்­பான தொழில்­நுட்­பங்­கள் பற்­றி­யும் துறை­மு­கப் பணி­க­ளின் நிர்­வா­கத்­தின் நடை­முறை ஆற்­றலை மேம்­

ப­டுத்­து­வது குறித்­தும் தேவைப்­படும் நட­வ­டிக்­கை­களில் இவை ஈடு­படும்.

ஆர்ச்­சர்ட் ஹோட்­ட­லில் நேற்று நடத்­தப்­பட்ட 12வது எஸ்­எம்ஐ கருத்­த­ரங்­கில் கலந்­து­கொண்ட நிதி, போக்­கு­வ­ரத்து மூத்த துணை அமைச்­சர் சீ ஹொங் டாட், நிதி ஒதுக்­கீடு பற்­றிய அறி­விப்பை வெளி­யிட்­டார்.

கடல்­துறை எரி­சக்தி மற்­றும் நீடித்த நிலைத்­தன்மை உன்­ன­தத்­துக்­கான மேம்­பாட்டு நிலை­யத்­துக்கு எஸ்­எம்ஐ $12 மில்­லி­யன் நிதி வழங்­கும். இந்­நி­லை­யம் நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­கா­கத்­தில் செயல்­ப­டு­கிறது.

எரி­சக்தி நிர்­வா­கம், கரிம நிர்­வா­கம், நீடித்து நிலைக்­க­வல்ல கடல்­துறை செயல்­பா­டு­கள் ஆகி­யவை தொடர்­பாக 2017ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்ட பணி­க­ளின் தொடர்ச்­சியே இது.

மேலும், இந்த நிலை­யம் இது­வரை 14 கடல்­துறை கரிம ஒழிப்பு ஆராய்ச்சி மற்­றும் மேம்­பாட்­டுத் திட்­டங்­களில் பணி­யாற்றி உள்­ளது.

கடல்­துறை எரி­பொ­ரு­ளாக அமோ­னி­யா­வைப் பயன்­ப­டுத்­து­வது தொடர்­பான ஆராய்ச்­சிப் பணி­களும் இவற்­றில் அடங்­கும்.

தொழில்­துறை பங்­கா­ளி­கள் மற்­றும் சிங்­கப்­பூர் கடல்­துறை துறை­முக ஆணை­யத்­தின் ஒத்­து­ழைப்­பு­டன் இவ்­வாண்­டின் செப்­டம்­பர் முதல் 16 இதர ஆராய்ச்சி மற்­றும் மேம்­பாட்­டுத் திட்­டங்­க­ளை­யும் இந்த நிலை­யம் கண்­ட­றிந்­துள்­ளது.

கடல்­துறை செயல்­பா­டு­களில் கரிம வெளிப்­பாட்­டை­யும் கரிம ஒழிப்­பை­யும் நிர்­வ­கிப்­ப­தில் இந்த ஆய்­வுப் பணி­கள் கவ­னம் செலுத்­தும். கரி­மம் குறைந்த மாற்று ஏற்­பாட்­டுக்கு மாறும் சிங்­கப்­பூ­ரின் எரி­சக்தி உத்­திக்கு உறு­து­ணை­யா­க­வும் இப்­ப­ணி­கள் அமை­யும்.

சிங்­கப்­பூர் கடல்­துறை சம்­மே­ள­னத்­தின் கடல்­துறை கரிம ஒழிப்பு தொடர்­பான அனைத்­து­லக ஆலோ­ச­னைக் குழு வழங்­கிய பரிந்­து­ரை­க­ளுக்கு ஏற்ப ஆராய்ச்­சிப் பணி­கள் அமைக்­கப்­பட்­ட­தாக சிங்­கப்­பூர் கடல்­துறை கல்­விக்­க­ழகம் தெரி­வித்­துள்­ளது.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் வடி­வ­மைப்பு மற்­றும் பொறி­யி­யல் கல்­லூ­ரி­யின் ஓர் அம்­ச­மான சி4என்­ஜிபி என்­னும் நிலை­யம் $10 மில்­லி­யன் நிதி­யைப் பெறும். இந்த ஐந்­தாண்டு நிதி­ய­ளிப்பு 2023ஆம் ஆண்டு ஜன­வரி 2 முதல் தொடங்­கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.