'சிபிஆர்' எனப்படும் ரசாயனம், நோய்த்தொற்று, கதிரியக்கம் ஆகியவற்றின் அச்சுறுத்தல் தொடர்பான பிரச்சினைகளைக் கலந்து ஆலோசிக்க மாநாடு ஒன்றுக்கு சிங்கப்பூர் ஏற்பாடு செய்துள்ளது.
'ஆசியான் தற்காப்பு அமைச்சர்களின் சந்திப்புடனான சிபிஆர்' என்னும் மாநாட்டின் தொடக்க நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட அனைத்துலக நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
இதுபோன்ற அச்சுறுத்தல்
களைக் கண்டறிவது பற்றியும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்
படுத்தி அச்சுறுத்தல்களை முறியடிப்பது பற்றியும் நிபுணர்கள் விவாதிப்பர்.
ஷாங்ரிலா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இருநாள் மாநாடு நேற்று தொடங்கியது. எந்த ஓர் அரசாங்கத்தையும் சாராத அமைப்புகளால் உண்டாக்கப்படும் சிபிஆர் அச்சுறுத்தல்
களைக் கையாள்வதில் இந்த வட்டாரத்தின் ஒற்றுமையைப் பலப்
படுத்தும் நோக்கில் மாநாடு நடத்தப்படுகிறது.
தொடக்க நிகழ்வில் உரையாற்றிய தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஹெங் சீ ஹாவ், பலர் உயிரிழக்கக்கூடிய பெரியதொரு சிபிஆர் தாக்குதல்களை அதிர்ஷ்டவசமாக இந்த வட்டாரம் இதுவரை சந்தித்திராவிட்டாலும் அதுதொடர்பான அச்சுறுத்தல் இன்னும் உள்ளது என்றார்.
இந்த வட்டாரத்தில் உள்ளவை உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் சிபிஆர் நச்சுப்பொருள்
களைப் பயன்படுத்துவது பற்றி ஏற்கெனவே பரிசீலித்து உள்ளனர் என்று அவர் கூறினார்.
கடந்த 2019ஆம் ஆண்டு அப்ரின் நச்சு ரசாயனத்தால் கூடிய வெடிபொருள்களைப் பயன்படுத்தும் ஐஎஸ்ஐஎஸ் குழுவின் முயற்சிகளை இந்தோனீசியா முறியடித்துள்ளதாக திரு ஹெங் குறிப்பிட்டார். சிபிஆர் அச்சுறுத்தல் என்பது எல்லைதாண்டிய ஒன்று என்பதால் இதனை எந்த ஒரு நாடும் தனியாகக் கையாள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
"பெரியதொரு சிபிஆர் பயங்கரவாதத் தாக்குதல் இந்த வட்டாரத்தில் நிகழ்ந்துவிடுமோ என்பதே நமது அச்சமாக உள்ளது.
"இது தொடர்பான சம்பவங்களை விசாரித்து தீர்வு காண்
பதில் ராணுவத்திற்கும் தற்காப்புத்துறை விஞ்ஞானிகளுக்கும் முக்கிய பங்கு உள்ளது," என்றார் திரு ஹெங்.

