பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருந்திருக்கும் காரணத்தால் 'மீ செடாப்' என்னும் இந்தோனீசிய நூடல்ஸின் மேலும் இரண்டு வகைகள் சிங்கப்பூ ரின் விற்பனையிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவற்றையும் சேர்த்து மீட்கப்படும் மீ செடாப் நூடல்ஸ் உணவின் எண்ணிக்கை ஆறுக்கு உயர்ந்துள்ளது.
'மீ செடாப் கரி ஸ்பெசல் இன்ஸ்டன்ட் நூடல்ஸ்', 'கொரியன் சிக்கன் இன்ஸ்டன்ட் கப் நூடல்ஸ்' ஆகியன தற்போது மீட்டுக்கொள்ளப்படும் உடனடி நூடல்ஸ் உணவு வகைகள்.
இவற்றை கடைகளில் இருந்து மீட்குமாறு சிங்கப்பூரில் இயங்கும் 'இன்டோஸ்டாப் சிங்கப்பூர்' என்னும் இந்தோனீசிய மளிகைப் பொருள் விற்பனை நிலையத்துக்கு சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டது. ஏற்கெனவே கடந்த வியாழக்கிழமை 'கொரியன் ஸ்பைசி சூப்', 'கொரியன் ஸ்பைசி சிக்கன்' என்னும் இரு வகை உடனடி நூடல்ஸ் வகைகள் மீட்டுக்கொள்ளப்பட்டன.
தொடர்ந்து கடந்த சனிக்கிழமை மேலும் இரு வகை நூடல்ஸும் இதே காரணத்துக்காக விற்பனையிலிருந்து மீட்கப்பட்டன. இந்த நூடல்ஸ் உணவு வகைகளின் மிளகாய்த் தூளில் எத்திலின் ஆக்ஸைட் வேதிப்பொருளுடன் நச்சுத்தன்மை கலந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
'மீ செடாப்' உடனடி நூடல்ஸ் தயாரிப்புகளையும் மிளகாய்த்தூளை யும் சந்தையிலிருந்து மீட்கும் நட
வடிக்கை தொடர்பாக இறக்குமதியாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாக இந்த நூடல்ஸ் உணவைத் தயாரிக்கும் 'விங்ஸ் சூர்யா' என்னும் இந்தோனீசிய நிறுவனம் கூறியது.

