போக்குவரத்து மற்றும் உணவு விநியோகச் சேவைகளை வழங்கும் தற்காலிக, பகுதிநேர ஊழியர்களுக்குப் (பிளாட்ஃபார்ம் ஊழியர்கள்) போதுமான ஓய்வுக்கால, வீடமைப்பு நிதி மற்றும் வேலையிட காய இழப்பீடு போன்றவை கிடைப்பது தொடர்பான பரிந்துரைகள் அடுத்த ஓரிரு மாதங்களில் தயாராகிவிடும் என்று மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் நேற்று தெரிவித்தார்.
2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இத்தகைய ஊழியர்
களுக்கான ஆலோசனைக் குழுவை மனிதவள அமைச்சு அமைத்தது. பரிந்துரைகளை அக்குழு பரி
சீலனை செய்துவருவதாகவும் அவை இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் டாக்டர் கோ தெரிவித்தார். விஸ்மா கேலாங் சிராயில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வின்போது இத்தகவலை அவர் வெளியிட்டார். கலந்துரையாடலில் டாக்சி ஓட்டுநர்கள், தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள், விநியோக ஓட்டு நர்கள் என 100 பேர் தங்கள் கருத்துகளையும் எதிர்நோக்கும் சவால்களையும் பகிர்ந்துகொண்டனர்.
ஆலோசனைக் குழுவின் ஆலோசகராக இருக்கும் டாக்டர் கோ, பரிந்துரைகள் இவ்வாண்டின் பிற்பாதியில் வெளியிடப்படும் என்று கூறினார்.
பரிந்துரைகள் அறிவிக்கப்படுவதுடன் பணிகள் முடிந்துவிடாது என்றும் இனிமேல்தான் திட்டங்கள் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
"பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டதும் ஊழியர்களுடன் பல கலந்துரையாடல்கள் நடத்தப்படும். பரிந்துரைகளை அவர்கள் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவி வழங்கப்படும். முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை எவ்வாறு நடை
முறைப்படுத்துவது என்பதைக் கண்டறிய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
"தேவைப்பட்டால் இலக்கை எட்ட சட்டத்தைத் திருத்துவது குறித்தும் அரசாங்கம் பரிசலீக்க வேண்டும். எனவே, செய்வதற்கு இன்னும் நிறைய உள்ளன. அடுத்த ஆண்டிலும் கலந்துரையாடல் தொடரும் என நான் நம்புகிறேன்," என்றார் டாக்டர் கோ.
2020ஆம் ஆண்டில் ஏறத்தாழ 79,000 'பிளாட்ஃபார்ம்' ஊழியர்கள் இருந்தனர்.
இது சிங்கப்பூரின் மொத்த ஊழியரணியில் மூன்று விழுக்
காடு ஆகும். இதுவரை ஏதேனும் பரிந்துரையை ஆலோசனைக் குழு உறுதிப்படுத்தியுள்ளதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த டாக்டர் கோ, கலந்துரையாடல்கள் தொடர்கின்றன என்றும் அனைத்துத் தரப்புகளின் இசைவும் தேவை என்றும் தெரிவித்தார்.

