மரணம் விளைவித்ததாக மருத்துவர்மீது குற்றச்சாட்டு

மரணம் விளைவித்ததாக மருத்துவர்மீது குற்றச்சாட்டு

1 mins read
6cd365f2-59ef-4a55-9aa5-8150771434cf
-

தம்­மி­டம் போடோக்ஸ் எனப்­படும் அழ­கு­ப­டுத்­தும் சிகிச்சை பெற்­றுக்­கொண்ட பெண்­ணுக்கு மர­ணம் விளை­வித்­த­தாக 34 வயது மருத்­து­வர் மீது குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது.

சிகிச்­சை­யின்­போது சான் பிங்யி கவ­னக்­கு­றை­வு­டன் நடந்து ­கொண்­ட­தால் 31 வயது திரு­வாட்டி லாவ் லீ டிங் உயி­ரி­ழந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

சிகிச்­சையை முன்­னிட்டு குறிப்­பிட்ட ஒரு­வகை மருந்தை அள­வுக்கு அதி­க­மா­க­வும் மிக வேக­மா­க­வும் திரு­வாட்டி லாவ்வின் உட­லுக்­குள் சான் செலுத்­தி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதன் கார­ண­மாக திரு­வாட்டி லாவின் இத­யம் செய­லி­ழந்­தது. கோமா நிலை­யில் இருந்த திரு­வாட்டி லாவ் ஐந்து நாள்­கள் கழித்து மர­ணம் அடைந்­தார்.

இது­கு­றித்து அவ­ரது குடும்­பத்­தி­னர் காவல்­து­றை­யி­ட­மும் சுகா­தார அமைச்­சி­ட­மும் புகார் அளித்தனர்.

திரு­வாட்டி லாவ்­

வுக்­கு அளிக்­கப்­பட்ட சிகிச்சை 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி நண்­ப­கல் அள­வில் பிராஸ் பசா சாலை­யில் உள்ள ரிவை­வல் மெடிக்­கல் அண்ட் எஸ்­தெட்டிக்ஸ் சென்­ட­ரில் நிகழ்ந்­தது.

சான் மீது கூடு­தல் குற்­றச்­சாட்­டு­கள் பதி­வா­கும் என்று நம்­பப்­ப­டு­கிறது. அவர் $5,000 பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார். அடுத்த மாதம் 7ஆம் தேதி­யன்று அவர் மீண்­டும் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­டு­வார்.

குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் சானுக்கு இரண்டு ஆண்­டு­கள் வரை சிறைத் தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.