விரலி (Thumb Drive) சாதனத்தைக் கண்டுபிடித்தவரும் டிரேக் 2000ன் நிறுவனருமான ஹேன் டானுக்கு பொய்க் கணக்கு காட்டிய குற்றத்துக்காக ஓராண்டு, நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பொய்க் கணக்கு காட்டவும் போலி ஆவணங்களைத் தயாரிக்கவும் கணக்குத் தணிக்கையாளர்களை ஏமாற்றவும் முற்பட்டதாக தம்மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை 66 வயது டான் ஒப்புக்கொண்டார்.
டானுக்கு எதிராகத் தீர்ப்பளிக்கப்பட்ட மேலும் நான்கு குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.
சிங்கப்பூரரான டான் 2006ஆம் ஆண்டுக்கும் 2011ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அப்போதைய தலைமை நிதி அதிகாரியாக இருந்த குர்சரண் சிங்குடன் இணைந்து டிரேக் 2000 நிறுவனத்தின் கணக்குகளை மாற்றி அமைத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2015ஆம் நிதி ஆண்டுக்கான கணக்குகளை டானும் சிங்கும் மாற்றி அமைத்திருப்பதை ஏர்ன்ஸ்ட் அண்ட யங் கணக்குத் தணிக்கை நிறுவனம் கண்டு
பிடித்ததை அடுத்து, இருவரின் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. சிங் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. டானுக்கும் சிங்கிற்கும் உடந்தையாக இருந்த ஃபூ டெங் பின்னுக்கு ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

