தந்தை மரணம்; மகன்மீது இன்று குற்றச்சாட்டு

ஈசூன் வட்­டா­ரத்­தில் உள்ள ஒரு வீட்­டில் 19 வயது இளை­யர் தமது தந்­தை­யைக் கொன்­றி­ருக்­கக்­

கூ­டும் என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது. சம்­பவ இடத்­தில் கைது செய்­யப்­பட்ட அந்த இளை­யர்­மீது இன்று கொலைக் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

நேற்று முன்­தி­னம் இரவு 7.05 மணி அள­வில் ஈசூன் அவென்யூ 4ல் உள்ள ஒரு வீட்­டி­லி­ருந்து உதவி கேட்டு தொலை­பேசி அழைப்பு கிடைத்­த­தாக காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­த­னர்.

சம்­பவ இடத்தை அதி­கா­ரி­கள் சென்­ற­டைந்­த­போது வீட்­டுக்கு வெளியே 47 வயது ஆட­வர் சுய­நி­னை­வின்றி கிடந்­த­தைக் கண்­ட­னர். அவ­ரைப் பரி­சோ­தித்­துப் பார்த்த மருத்­துவ உத­வி­யா­ளர்­கள் அவர் இறந்­து­விட்­ட­தாக அறி­வித்­த­னர்.

இது­தொ­டர்­பாக காவல்­துறை அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்­து ­கின்­ற­னர். கொலைக் குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் இளையருக்கு மர­ணத் தண்­டனை விதிக்­கப்­படும்.

உயி­ரி­ழப்­ப­தற்கு முன்பு அந்த ஆட­வர் ரத்த வெள்­ளத்­தில் அண்­டை­வீட்­டா­ரின் கத­வைத் தட்டி உதவி கேட்­ட­தாக அறி­யப்­ப­டு­கிறது. சம்­ப­வம் நிகழ்ந்த குடி­யி­ருப்­புக் கட்­ட­டத்­தின் நான்­கா­வது மாடிக்­கும் ஐந்­தா­வது மாடிக்­கும் இடை­யில் உள்ள படிக்­கட்­டு­களில் ரத்­தக் கறை தென்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!