மானபங்கக் குற்றம்: ஆடவருக்குச் சிறை

மானபங்கக் குற்றம்: ஆடவருக்குச் சிறை

1 mins read
bbdc2699-eb35-480c-b478-5e8c6959d64c
-

கொண்­டோ­மி­னி­யம் ஒன்­றில் தம்­மு­டன் வேலை பார்த்த 16 வயது சிறு­மியை அப்­போது அங்கு பாது­காவல் மேற்­பார்­வை­யா­ள­ரா­கப் பணி­பு­ரிந்த ஆட­வர் மான­பங்­கம் செய்­தார்.

இத­னால் அந்த 58 வயது ஆட­வ­ருக்கு ஓராண்டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்ட்து.

இந்தக் குற்றத்தை அவர் கடந்த பிப்ரவரி மாதம் 13ஆம் தேதியன்று புரிந்தார்.

பாது­கா­வல் அதி­கா­ரி­க­ளுக்­கான கூடத்­தில் கிட்­டத்­தட்ட அரை மணி நேரமாக அச்­சி­றுமி எதிர்ப்பு தெரி­வித்­தும் அவரை அந்த ஆட­வர் மான­பங்­கம் செய்­தார். பிறகு அச்­சி­று­மி­யி­டம் $100 கொடுத்து தம்­மு­டன் முறை­யற்ற செய­லில் ஈடு­ப­டச் சொன்­னார். அதற்கு அச்­சி­றுமி மறுத்­து­விட்­டார்.

பாதிக்­கப்­பட்ட சிறு­மி­யின் அடை­யா­ளத்­தைக் காக்க அந்த ஆட­வ­ரின் பெயரை வெளி­யி­டக்­கூ­டாது என்று உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

அந்த கொண்­டோ­மி­னி­யத்­தில் தற்­கா­லி­கப் பாது­காவல் அதி­காரி­ க­ளா­கப் பணி­யாற்ற அச்­சி­று­மி­யை­யும் சிறு­மி­யின் தாயா­ரு­டைய இரண்­டா­வது கண­வ­ரை­யும் அந்த ஆட­வர் வேலை­யில் சேர்த்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.