காவல்துறை அதிகாரி சாலையில் இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம்: டாக்சி ஓட்டுநர் கைது

காவல்துறை அதிகாரி சாலையில் இழுத்துச்செல்லப்பட்ட சம்பவம்: டாக்சி ஓட்டுநர் கைது

1 mins read
a3eb2ad5-ffc4-4f6c-8e3f-24344831785f
படம்: SG ROAD VIGILANTE/யுடுயூப் -

அரசாங்க அதிகாரி ஒருவரைக் காயப்படுத்திய டாக்சி ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டார். அதிகாரி தனது கடமையைச் செய்யவிடாமல் தடுக்க அவரை வேண்டுமென்ற காயப்படுத்திய குற்றத்திற்காக 69 வயதான ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டார்.

அக்டோபர் 9 அன்று மாலை 5.15 மணியளவில் ஹாலந்து ரோட்டில் டாக்சி ஓட்டுநர் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருக்கும்போது கைபேசியைப் பயன்படுத்துவதை போக்குவரத்து காவல்துறை அதிகாரி கண்டுள்ளார். ஓட்டுநர் வாகனத்தை நிறுத்துமாறு அதிகாரி சைகை செய்தும் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தவில்லை. டாக்சியை பின்தொடர்ந்த அதிகாரி ஃபேரர் ரோடு அருகே ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தும்படி செய்தார்.

அதிகாரி கேட்ட கேள்விகளுக்கு ஓட்டுநர் பதில் அளிக்கவில்லை. ஓட்டுநர் வாகனத்தை ஓட்டிசெல்லக்கூடும் என உணர்ந்த அதிகாரி வாகனத்தின் சன்னல் வழியாக தனது கையைவிட்டு வாகனத்தின் இயந்திரத்தை நிறுத்த முற்பட்டார். சட்டென்று ஓட்டுநர் சன்னலை மேல் ஏற்றி வாகனத்தை ஓட்டத் தொடங்கினார்.

சன்னலுக்கு இடையே அதிகாரியின் கை சிக்கிக்கொண்டதால் அவர் சிறிது தூரம் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டார். இறுதியில் ஓட்டுநர் டாக்சியை நிறுத்தி சன்னலை கீழே இறக்கினார்.

இதனைத் தொடர்ந்து ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டார். போக்குவரத்து காவல்துறை அதிகாரி மருத்துமனையில் வெளிநோயாளிக்கான சிகிச்சை பெற்றார்.