மெக்சிகோ மீது கண்வைக்கும் உள்ளூர் நிறுவனங்கள்

மெக்சிகோ மீது கண்வைக்கும் உள்ளூர் நிறுவனங்கள்

2 mins read
3cbac130-2c68-4613-af9f-3d74f3cfc260
-

புவி­சார் அர­சி­யல் பதற்­றங்­கள் தொடர்ந்து இருந்து வரு­கின்­றன. உண­வுப்­பொ­ருள் வழங்­கீட்டு கட்­ட­மைப்­பு­களும் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கு­கின்­றன.

இத்­த­கைய சூழ­லில், சில சிங்­கப்­பூர் உற்­பத்­தித் துறை நிறு­வனங்­கள், மெக்­சி­கோ­வில் தொழிற்­சாலை­களை அமைத்து பொருள்­களைத் தயா­ரித்து அமெ­ரிக்­கா­வுக்கு ஏற்­று­மதி செய்­வது குறித்து பரி­சீ­லிக்­கின்­றன.

மெக்­சி­கோ­வில் பொருள் களைத் தயா­ரித்­தால் வட­அ­மெ­ரிக்க வாடிக்­கை­யா­ளர்­களை எட்டு­வது எளி­தாக இருக்­கும்; தீர்­வை­களும் தள­வா­டப் போக்கு­வ­ரத்­துச் செல­வு­களும் குறை­ந்துவி­டும் என்று அவர்­கள் கரு­து­கி­றார்­கள்.

கொவிட்-19 தொற்று கார­ண­மாக உல­க­ள­வில் பொருள், சேவை விநி­யோ­கக் கட்­ட­மைப்பு பெரி­ய­ள­வில் பாதிக்­கப்­பட்டு இருக்­கிறது.

கப்­பல்­களில் உற்­பத்­திப் பொருள்­களை அனுப்­பு­வ­தற்­கான செலவு பல மடங்கு கூடி­யி­ருக்­கிறது. மெக்­சிகோ மீது கண்­வைக்­கும் நிறு­வ­னங்­களில் 'ரேசர் டெக்­னா­லஜி மெடிகா' என்ற மருந்­துப்­பொ­ருள் தயா­ரிப்பு நிறு­வ­னமும் ஒன்­றா­கும்.

இந்த நிறு­வ­னத்­தின் உரி­மை­யா­ள­ரான வில்லி கோ, இந்த மாதத் தொடக்­கத்­தில் மெக்­சிகோ சென்று அங்கு தொழில் வாய்ப்பு­களை அலசி ஆராய்ந்­தார்.

மெக்­சிகோ மக்­கள் நிறு­வ­னங்­களை வர­வேற்­கி­றார்­கள். அதோடு மட்­டு­மல்­லா­மல், மெக்­சி­கோ­வில் தொழில் நடத்­து­வ­தில் உள்ள சாதக, பாத­கங்­களை அவர்­கள் மனம் திறந்து ஒளி­வு­ம­றைவு இல்­லா­மல் எடுத்­துக் கூறி விளக்­கு­கி­றார்­கள் என்று அவர் கூறினார்.

அந்த மெக்­சிகோ வர்த்­த­கப் பய­ணத்­திற்கு சிங்­கப்­பூர் துல்­லியப் பொறி­யி­யல், தொழில்­நுட்­பச் சங்­கமும் எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்­பும் ஏற்­பாடு செய்­தி­ருந்­தன. அந்த ஏற்­பாட்­டின் பேரில் சிங்­கப்­பூ­ரின் ஏழு நிறு­வ­னங்­கள் மெக்­சிகோ சென்­றன.

மெக்­சிகோ பற்றி கருத்து கூறிய இந்­தச் சங்­கத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் சைமன் லிம், மெக்­சி­கோ­வில் உற்­பத்­தித் துறை அலை அலை­யா­கப் பெரு­கு­கிறது. துல்­லி­யப் பொறி­யி­யல் துறைக்குப் பெரும் தேவை நில­வு­கிறது என்று கூறி­னார்.