சிங்கப்பூர் கடைகளில் இன்று மலேசியக் கோழிகள் கிடைக்கும்

சிங்கப்பூர் கடைகளில் இன்று மலேசியக் கோழிகள் கிடைக்கும்

1 mins read
3a7ef828-fd3b-4d6b-bfee-c36840c38cb9
-

மலே­சி­யா­வில் இருந்து பிராய்­லர் கோழி­கள் இன்று பிற்­ப­க­லில் சிங்­கப்­பூர் சில்­லறை விற்பனைக் கடை­களுக்கு வர­ம்புக்குட்­பட்ட அளவில் வந்­து­வி­டும் என்று கீ சோங் ஃபுட் என்ற கோழி இறக்­கு­மதி நிறு­வ­ன தொழில் மேம்பாட்டுப் பிரி­வின் தலை­வ­ர் ஜேம்ஸ் சிம் கூறினார்.

விலை ஏறக்­கு­றைய 10% முதல் 16% வரை அதிகரித்து இருப்­ப­தா­க­வும் அவர் தெரிவித்தார்.

அதே­வே­ளை­யில், பேரங்­கா­டி­கள், ஈரச் சந்­தை­கள் போன்ற சில்­லறை விற்பனைக் கடை­க­ளுக்கு நாளை வெள்­ளிக்­கி­ழமை காலை­யில்­தான் மலே­சியக் கோழி வரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக இதர சில இறக்­கு­ம­தி­யா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

ஷெங் சியோங் போன்ற பேரங்­கா­டி­க­ளும் இதை உறு­திப்­ப­டுத்­தின.

மலே­சி­யா­வில் உற்­பத்தி குறைந்த தாலும் விலை ஏற்­றத்­தா­லும் சிங்­கப்­பூ­ருக்­கான கோழி ஏற்­று­ம­திக்கு கடந்த ஜூன் 1 முதல் மலே­சியா தடை விதித்­தது.

அந்­தத் தடை, கடந்த செவ்­வாய்க்­கிழமை அக­லும் என்று மலே­சிய அதி­கா­ரி­கள் கடந்த ஞாயிற்­றுக்கிழமை உறு­திப்­ப­டுத்­தி­னர்.

அதையடுத்து மலேசியக் கோழி இறக்குமதியாகிறது.