வீவக, தனியார் வீட்டு வாடகை சென்ற மாதமும் அதிகரித்தது; அனைத்து வகை வீவக வீடுகளுக்கான வாடகை 3.2% கூடியது

வீவக, தனியார் வீட்டு வாடகை சென்ற மாதமும் அதிகரித்தது; அனைத்து வகை வீவக வீடுகளுக்கான வாடகை 3.2% கூடியது

2 mins read
ebee4be0-026a-46fd-b606-49eea2a288ea
-

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம், தனி­யார் அடுக்­கு­மாடி வீடு­க­ளுக்­கான வாடகை சென்ற மாத­மும் கூடி­யது.

வாட­கைச் சந்தை வேகத்தை மட்டுப்­ப­டுத்த மேலும் நெருக்­குதல் களை நடை­மு­றைப்­ப­டுத்­த­லாம் என்று பகுப்­பாய்­வா­ளர்­கள் கூறு­கிறார்­கள்.

வீவக வீட்டு வாடகை, செப்­டம்­பரில் 3.2% கூடி­யது. இந்த அதி­கரிப்பு ஆகஸ்ட்­டில் 2.4%ஆக இருந்தது.

முதிர்ச்சி அடைந்த, முதிர்ச்­சி­அடை­யாத பேட்­டை­களில் எல்லா வகை வீடு­க­ளுக்­கு­மான வாடகை உயர்ந்து இருப்­ப­தாக 99.co, எஸ்­ஆர்­எக்ஸ் சொத்­துச் சந்தை இணை­யத்தளங்­கள் மூலம் தெரி­ய­வந்து இருக்­கிறது.

கூட்­டு­ரிமை அடுக்­கு­மாடி வீடு­களின் வாடகை சென்ற மாதம் 3.3% உயர்ந்­தது.

இந்த அதி­க­ரிப்பு அதற்கு முந்­திய மாதம் 3.2% ஆக இருந்­தது.

நகர விளிம்­புப் பகு­தி­களில் இருக்­கும் இத்­த­கைய வீடு­க­ளுக்­கான வாடகை 3.9% கூடி இருக்கிறது.

சென்ற மாதத்­தை­யும் கணக்­கில் எடுத்­துக்கொண்டு பார்க்­கை­யில் வீவக வீட்டு வாடகை தொடர்ந்து 27வது மாத­மாக அதி­க­ரித்து வந்­தி­ருக்­கிறது.

அதே­போல, தனி­யார் வீட்டு வாடகை தொடர்ந்து 21 மாத­மாக உயர்ந்து வந்­துள்­ளது.

இத­னி­டையே, இந்­தச் சந்தை நில­வ­ரம் பற்றி கருத்துக் கூறிய ஆரஞ்ச்டீ & டை நிறு­வ­னத்­தின் ஆய்வு பகுப்­பாய்வுப் பிரி­வின் மூத்த துணைத் தலை­வர் கிறிஸ்­டி­யன் சன், வாடகை கூடி­னா­லும் தேவை தொடர்ந்து வலு­வா­கவே இருந்து வரு­கிறது என்று கூறினார்.

வீட்டை வாட­கைக்கு விடு வோருக்கு இது நல்ல கால­ம் என்று அவர் குறிப்­பிட்­டார். முன்­னி­லும் குறை­வாக வீடு­களே கிடைப்­ப­தால், அதிக வாட­கையைக் கொடுத்­து­விட்டு குடி­யி­ருக்க பல­ரும் முடிவு செய்­கி­றார்­கள்.

பழைய வீடு­க­ளாக இருந்­தா­லும் தொலை­தூர வீடு­க­ளாக இருந்­தா­லும் உட­ன­டி­யாக நல்ல வாட­கை­யில் எடுத்­துக் கொள்­ளப்­ப­டு­கின்றன என்று அந்த மாது விளக்­கினார்.

ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் பார்க்­கை­யில், தனி­யார் வீட்டு வாடகை இந்த ஆண்டு செப்­டம்­பரில் 30.9% கூடி­யி­ருக்­கிறது. நகர விளிம்­புப் பகு­தி­களில் இருக்­கும் வீடு­க­ளுக்­கான வாடகை 31.8% அதி­க­ரித்து உள்­ளது.

அதே­போல, வீவக வாடகை வீடு­க­ளைப் பார்க்­கை­யில், அவற்­றுக்­கான வாடகை சென்ற ஆண்டு செப்­டம்­ப­ரு­டன் ஒப்­பி­டு­கை­யில், இந்த ஆண்டு 24.7% கூடி இருக்­கிறது. ஐந்­தறை வீட்டு வாடகை 27.9% அதி­க­ரித்­துள்­ளது.

இது ஒரு­பு­றம் இருக்க, வாட­கைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட தனி­யார் வீடு­க­ளின் எண்­ணிக்­கை­யும் சென்ற மாதம் ஏறக்­கு­றைய 9.8% கூடி 4,760 வீடு­க­ளாக இருந்தன.

அதே­போல, வாட­கைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட வீவக வீடு­களின் எண்­ணிக்­கை­யில் சென்ற மாதம் 0.3% அதிகரிப்பு காணப்­பட்­டது.

வாட­கைக்­குப் பெறப்­பட்ட வீவக வீடு­களின் எண்­ணிக்கை 1,809 என்­பது தெரி­ய­வந்­தது.

ஆண்­டுக்­காண்டு அடிப்­ப­டை­யில் வாட­கைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட வீவக வீடு­க­ளின் எண்­ணிக்கை இந்த ஆண்டு செப்­டம்­பரில் 5.1% கூடி இருக்­கிறது.