சுகாதாரப் பராமரிப்பில் தரம் பேணுக

சுகாதாரப் பராமரிப்பில் தரம் பேணுக

2 mins read
0e1578e4-a11b-4642-9f3d-7b8d7f0ab231
-

தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமத் தலைமை நிர்வாகி வலியுறுத்து

சிங்­கப்­பூர் மக்­கள்­தொகை மூப்­ப­டைந்­து­வ­ரும் நிலை­யில் தர­மான பரா­ம­ரிப்பை வழங்­கும் வகை­யில் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு வழங்­கும் வழி­முறை மாற வேண்­டி­யது அவ­சி­யம் என்று தேசிய சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் குழு­மத்­தின் தலைமை நிர்­வாகி பேரா­சி­ரி­யர் ஃபிலிப் சூ வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில், மூப்­ப­டை­யும் சமூ­கத்­திற்­குச் சிறந்த பரா­ம­ரிப்பை வழங்க குழு­மம் பல முக்­கிய மாற்­றங்­களை அடை­யா­ளம் கண்­டுள்­ளது. ஏனெ­னில், முதி­ய­வர்­கள் நாட்­பட்ட நோய்­க­ளால் பாதிக்­கப்­பட வாய்ப்­புள்­ளது. அத­னால், சுகா­தாரப் பரா­ம­ரிப்பு சேவை­க­ளுக்­கான தேவை­யும் அதி­க­ரிக்­கும்.

நோயாளி ஒரு­வர், நிபு­ணத்­துவ மருத்­து­வர் அல்­லது ஆரம்ப சுகா­தார மருத்­து­வ­ரைப் பார்த்­தா­லும் அல்­லது மருத்­து­வ­ம­னையை நாடி­னா­லும், அதைப் பொறுத்­தல்­லா­மல் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் சேவை­யாற்­றும் வகை­யில் ஒற்­றைப் பரா­ம­ரிப்­புத் திட்­டத்­தைக் கொண்­டி­ருப்­பது அவற்­றில் ஒன்று.

'ஹெல்த்­தி­யர் எஸ்ஜி' திட்­டம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்­கப்­பட இருக்­கிறது. இத­னை­ய­டுத்து, நோய்த்­த­டுப்பு மருத்­து­வம், ஒருங்­கி­ணைந்த பரா­ம­ரிப்­புத் திட்­டங்­க­ளுக்­காக மருத்­து­வத்­து­றைத் தலை­வர்­க­ளின் தலை­மை­யில் பல குழுக்­களை தேசிய சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் குழு­மம் அமைத்­துள்­ளது.

இந்­நி­லை­யில், தேசிய சுகா­தாரப் பரா­ம­ரிப்­புக் குழு­மத்­தின் 20வது சிங்­கப்­பூர் சுகா­தார, உயிர்­ம­ருத்­துவ மாநாட்­டில் தொடக்க உரை­யாற்­றி­ய­போது, அதன் பரா­ம­ரிப்­பின்­கீழ் வரும் 1.5 மில்­லி­யன் பேருக்­குப் பொறுப்­பு­டன் பரா­ம­ரிப்பு வழங்­கு­வ­தன் அவ­சி­யம் குறித்­துப் பேரா­சி­ரி­யர் சூ வலி­யு­றுத்­தி­னார்.

அதற்கு, தனி­யார் மருத்­து­வர்­கள் உட்­பட பல்­வேறு பங்­கா­ளி­களு­டன் தேசிய சுகா­தா­ரப் பரா­மரிப்­புக் குழு­மம் அணுக்­க­மா­கப் பணி­யாற்ற வேண்­டி­யுள்­ளது என்­றார் அவர்.

சிங்­கப்­பூர் எக்ஸ்­போ­வில் நடை­பெற்ற இந்த இரண்­டு­நாள் மாநாட்­டில் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை­யு­டன் தொடர்­பு­டைய ஏறக்­கு­றைய 1,350 பேர் கலந்­து­கொண்­ட­னர்.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­பில் தொழில்­நுட்­பம் எத்­த­கைய தாக்­கத்தை ஏற்­ப­டுத்த முடி­யும் என்­பது குறித்­தும் ஊழி­ய­ர­ணி­யில் செய்­யப்­பட வேண்­டிய மாற்­றங்­கள் குறித்­தும் மாநாட்­டில் ஆரா­யப்­பட்­டது.