சிங்கப்பூர் - கஸக்ஸ்தான் உறவு மறுவுறுதி

சிங்கப்பூர் - கஸக்ஸ்தான் உறவு மறுவுறுதி

1 mins read
2cba1840-88eb-4da0-a993-092a52ae6475
-

சிங்கப்பூர்-கஸக்ஸ்தான் நாடுகளுக்கு இடையே அரசதந்திர உறவுகள் மலர்ந்து 30 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இருநாடுகளும் தங்களுக்கு இடையிலான நீண்டகால உறவுகளை நேற்று மறுவுறுதி செய்தன. பணிநிமித்தமாக கஸக்ஸ்தான் சென்றுள்ள பிரதமர் அலுவலக அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான், கஸக்ஸ்தான் அதிபர் காசிம் ஜோமர்ட் டோக்கயேவைச் சந்தித்தார். அப்போது கஸக்ஸ்தானில் தொழில் வாய்ப்புகளை, குறிப்பாக போக்குவரத்து, தளவாடத் துறைகளில் வாய்ப்புகளை ஆராய வேண்டும் என்று சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு திரு காசிம் ஊக்குவித்தார். கஸக்ஸ்தான் துணைப் பிரதமரையும் திரு ஒஸ்மான் சந்தித்தார்.