பாலர் பருவக் கல்வியாளர்கள் 12 பேருக்கு உபகாரச் சம்பளம்

ஆரம்­பக் கல்­வித் துறை­யில் பட்­ட­மும் முது­க­லைப் பட்­ட­மும் பயில்­வதற்­காக 12 பாலர் பரு­வக் கல்­வி­யா­ளர்­க­ளுக்கு, பாலர் பருவ மேம்­பாட்டு அமைப்பு நேற்று உப­கா­ரச் சம்­பள விருது வழங்­கி­யது. இந்த உப­கா­ரச் சம்­ப­ளத்­தின்­வழி சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லும் தேசிய கல்­விக் கழ­கத்­தி­லும் இணைந்து படிக்­கத் தேவை­யான நிதி வழங்­கப்­படும்.

தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கம், பல­து­றைத் தொழில்­நுட்­பக் கல்­லூரி­கள், பல்­க­லைக்­க­ழ­கங்­கள் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த 260க்கும் மேற்­பட்ட மாண­வர்­க­ளுக்கு பாலர் பருவ மேம்­பாட்டு அமைப்­பின் பயிற்சி விரு­தும் வழங்­கப்­பட்­டது. மாண­வர்­கள் தற்­போது பயி­லும் பாடங்­களுக்­கான கட்­ட­ணத்தை இந்த விருது ஈடு­செய்­யும் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

சன்­டெக் சிங்­கப்­பூர் மாநாட்டு நிலை­யத்­தில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற விழா­வில் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மசகோஸ் ஸுல்­கி­ஃப்லி விரு­து­களை வழங்­கி­னார்.

தர­மான பாலர் கல்­வித் துறை­யின் மைய­மாக கல்­வி­யா­ளர்­கள் உள்­ள­னர் என்று குறிப்­பிட்ட திரு மச­கோஸ், அர­சாங்­கம் தொடர்ந்து கல்­வி­யா­ளர்­க­ளின் வளர்ச்­சி­யை­யும் வாழ்க்­கைத்­தொ­ழில் லட்­சி­யங்­களை­யும் ஆத­ரிக்­கும் என்­றார்.

பாலர் பருவ மேம்­பாட்டு அமைப்பு 2015ஆம் ஆண்டு முதல் $86 மில்­லி­யன் மதிப்­பில் 180 உப­கா­ரச் சம்­பள விரு­து­க­ளை­யும் 2,700 பயிற்சி விரு­து­க­ளை­யும் வழங்­கி­யுள்­ளது.

"உங்­க­ளது முயற்­சி­க­ளின்­வழி நம் சமு­தா­யத்­தின் அடித்­த­ள­மாக விளங்­கும் குடும்­பங்­க­ளுக்கு நீங்­கள் ஆத­ர­வாக இருக்­கி­றீர்­கள். வச­தி­கு­றைந்த பின்­ன­ணி­யு­டைய பிள்­ளை­கள் உட்­பட அனைத்து பிள்­ளை­க­ளுக்­கும் பாலர் பரு­வக் கல்­வி­யா­ளர்­கள் பரா­ம­ரிப்­பும் கல்வி­யும் வழங்­கும்­போது, குடும்­பங்­கள் மேம்­ப­டு­கின்­றன.

"தங்­க­ளின் பிள்­ளை­க­ளுக்­குச் சிறந்த பரா­ம­ரிப்பு கிடைக்­கும் உறு­தியை வேலைக்­குச் செல்­லும் பெற்­றோர் பெறு­கின்­ற­னர்," என்று விழா­வுக்கு வந்­தி­ருந்த பாலர் பரு­வக் கல்­வி­யா­ளர்­க­ளி­ட­மும் மாண­வர்­களி­ட­மும் திரு மச­கோஸ் கூறி­னார். ஆரம்­பக் கல்­வி­யா­ளர்­க­ளி­டத்­தில் மேலும் பெரிய பொறுப்­பு­கள் ஒப்­ப­டைக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அவர்­களுக்­குக் கூடு­தல் திறன்­கள் உள்­ள­தா­க­வும் அர­சாங்­கம் அறிந்­துள்­ளது என்­றார் அவர்.

"உங்­க­ளின் பங்­க­ளிப்­புக்­கும் நிபு­ணத்­து­வத் திறன்­க­ளுக்­கும் ஈடு­கொ­டுக்­கும் அள­வில் கல்­வி­யாளர்­களின் சம்­ப­ளங்­கள் இருப்­பதை உறு­தி­செய்­வ­தற்­காக நாங்­கள் மேலும் முயற்சி எடுப்­போம்," என்று அவர் குறிப்­பிட்­டார்.

பாலர் பள்­ளிக் கல்­வி­யா­ளர்­களின் சம்­ப­ளம் தற்­போது மறு­ஆய்வு செய்­யப்­பட்டு வரு­கிறது. இவ்­வாண்டு இறு­திக்­குள் மறு­ஆய்வு முடி­வ­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­படு­வ­தா­க­வும் அமைச்­சர் மச­கோஸ் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!