தந்தையைக் கொலை செய்ததாக 19 வயது இளைஞன் மீது குற்றச்சாட்டு

தந்தையைக் கொலை செய்ததாக 19 வயது இளைஞன் மீது குற்றச்சாட்டு

2 mins read
f8d91589-7420-4c4d-8cb2-f4ce75e88ecb
வீட்டின் வெளியே ரத்தக் கறை படிந்த பொருள்கள் காணப்பட்டன. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

தன் தந்­தை­யைக் கொலை செய்­த­தாக 19 வயது சைலஸ்­நர் சியா ஜியே காய் மீது நேற்று குற்­றம் சாட்­டப்­பட்­டது. ஈசூன் அவென்யூ 4ல் உள்ள புளோக் 653ன் 4வது மற்­றும் 5வது மாடி­க­ளுக்­கி­டையே 47 வயது திரு எடி சியா வீ டெக் கொல்­லப்­பட்­ட­தன் தொடர்­பில் இளை­ஞன் மீது குற்­றம் சாட்­டப்­பட்­டது. நீதி­மன்­றத்­தில் நேற்­றுக் காலை 10 மணி­ய­ள­வில் காணொளி இணைப்­பின்­வழி தோன்­றிய சியா, தலை குனிந்­த­படி இருந்­தார்.

விசா­ர­ணை­யில் உதவ, மத்­திய காவல்­து­றைப் பிரி­வில் சியா­வைத் தடுத்­து­வைக்­கு­மாறு காவல் துறை­யி­னர் கேட்­டுக்­கொண்­ட­னர்.

இரண்டு நாள்­க­ளுக்கு அவ்­வாறு தடுத்­து­வைப்­ப­தற்கு மாவட்ட நீதி­பதி டேரண்ஸ் டே ஒப்­பு­தல் வழங்கி­னார். வழக்­க­றி­ஞர்­கள் சுனில் சுதீ­சன், ஜாய்ஸ் கூ ஆகி­யோர் சியா­வைப் பிர­தி­நி­திப்­பர் என்று அறி­யப்­ப­டு­கிறது. வழக்கு தொடர்­பில் பேசு­வ­தற்­கும் அவ­ரு­டைய கோரிக்கை­க­ளுக்கு உத­வு­வ­தற்­கும் தன் கட்­சிக்­கா­ரரை எந்­நே­ர­மும் பார்ப்­ப­தற்கு அனு­மதி வழங்­கு­மாறு திரு சுதீ­சன் விண்­ணப்­பித்­துள்­ளார்.

இல்­லை­யேல், சியா­வுக்­குச் சட்­ட­ரீ­தி­யாக உள்ள உரி­மை­களை அவ­ரி­டம் விளக்­கத் தமக்கு அனு­மதி வழங்­கு­மாறு கேட்­டுக்­கொண்­டார்.

இது தொடர்­பான தற்­காப்­புத் தரப்பு வாதம் இன்­றைய வழக்கு விசா­ர­ணை­யில் தொடர்­கிறது.

திரு எடி சியா­வும் அவ­ரின் மனை­வி­யும் சொத்­துச்­சந்தை விற்­பனை மற்­றும் வாடகை தொடர்­பில் வர்த்­த­கப் பங்­கா­ளி­க­ளாக இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இரு­வ­ருக்­கும் 1994ஆம் ஆண்­டில் திரு­ம­ண­மா­ன­தா­க­வும் அவர்­களுக்கு ஒரு மகளும் இரு மகன்­களும் இருப்­ப­தா­க­வும் அறி­யப்­ப­டு­கிறது. ஐந்­தா­வது மாடி­யில் அவர்­களின் வீடு இருப்­ப­தா­க­வும் கூறப்­படு­கிறது. குற்­றம் சாட்­டப்­பட்ட சியா, தம்­ப­தி­யின் ஆக இளைய பிள்ளை என்று நம்­பப்­ப­டு­கிறது.

சம்­ப­வம் நடந்த மறு­நாள் அங்கு ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் சென்று விசா­ரித்­த­தில் அண்­டை­வீட்­டார் இன்­ன­மும் அதிர்ச்­சி­யில் இருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

திரு எடி சியா சரிந்து தரை­யில் விழு­வ­தற்­கு­முன் அவ­ரின் முக­மும் ஆடை­களும் ரத்த வெள்­ளத்­தில் நனைந்­தி­ருப்­ப­தைப் பார்த்­த­தா­கக் குடி­யி­ருப்­பா­ளர் ஒரு­வர் கூறி­யி­ருந்­தார்.

உதவி தேவை எனத் திங்­கட்­கி­ழமை இரவு 7.05 மணிக்­குத் தங்­க­ளுக்கு அழைப்பு வந்­த­தா­கக் காவல் துறை­யி­னர் தெரி­வித்­த­னர்.

சம்­பவ இடத்தை அதி­கா­ரி­கள் அடைந்­த­போது ஒரு வீட்­டின் வெளியே திரு எடி சியா பேச்சு மூச்­சின்­றிக் கிடந்­த­தா­கக் கூறப்­பட்­டது. அவர் உயி­ரி­ழந்­து­விட்­டதை மருத்­துவ அதி­கா­ரி­கள் உறு­தி­செய்­ததை அடுத்து சைலஸ்­நர் உடனே கைதும் செய்­யப்­பட்­ட­தா­கக் கூறப்­படு­கிறது.