காஸ்வே பாலத்தில் இன்று காலை பல லாரிகளும் குறைந்து 2 வாகனங்களும் சிக்கிய விபத்து நேர்ந்தது. இதனால் இரண்டு மணிநேரம் வரை பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விபத்தில் சிக்கிய வாகனம் ஒன்று மோசமாக சேதமடைந்திருப்பதைக் காட்டும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இரண்டு லாரிகளுக்கிடையே வாகனம் சிக்கிக்கொண்டிருப்பது புகைப்படத்தில் தெரிகிறது. மேலும் ஒரு வாகனத்துக்கும் சேதமடைந்தாகக் கூறப்பட்டது. இதனால் ஜோகூருலிருந்து சிங்கப்பூருக்கு வரும் போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டது.
விபத்தால் மூன்று தடங்களில் இரண்டு மூடப்பட்டதாக குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையம் அதன் பேஸ்புக் பக்கத்தில் காலை 9.45 மணியளவில் தெரிவித்தது.
11 மணிக்கெல்லாம் போக்குவரத்து நெரிசல் வழக்கநிலைக்கு திரும்பியதாக ஆணையம் தெரிவித்தது.


