மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக நடிகருக்கு $6,500 அபராதம்

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக நடிகருக்கு $6,500 அபராதம்

1 mins read
dc5878a2-0260-407e-bc20-5cd14d696da8
நீதிமன்ற வளாகத்தில் காணப்பட்ட எட்வின் கோ. படம்: ஷின் மின் -

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக மீடியாகார்ப் நடிகர் எட்வின் கோவுக்கு $6,500 அபராதமும் மூவாண்டுகளுக்கு வாகனம் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டது.

அபராதத் தொகையை இவர் செலுத்திவிட்டார்.

செப்டம்பர் 7ஆம் தேதி அல்ஜூனிட் சாலை வழியாக வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்த கோவிடம் 100 மில்லிலிட்டர் மூச்சுக் காற்றில் 81 மைக்ரோகிராம் அளவு மது இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது, அனுமதிக்கப்பட்ட 35 மைக்ரோகிராம் அளவைவிட இருமடங்கிற்கும் அதிகம்.

தாம் புரிந்த தவற்றைப் பற்றி தாம் சிந்தித்துப் பார்த்ததாகவும் தண்டனையைக் குறைத்து விதிக்கும்படியும் தமது தண்டனைக் குறைப்பு மனுவில் கோ கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்