ஏர் இந்தியா, விஸ்தாரா ஆகிய விமானச் சேவைகளை இணைப்பது குறித்து டாட்டா குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) தெரிவித்துள்ளது.
எஸ்ஐஏ நிறுவனத்திற்கும் டாட்டா குழுமத்திற்கும் இடையே உள்ள பங்காளித்துவத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக எஸ்ஐஏ குறிப்பிட்டது. இதில் ஓர் அங்கமாக ஏர் இந்தியாவையும் விஸ்தாராவையும் இணைப்பது குறித்தும் இரு நிறுவனங்களும் கலந்தாலோசித்து வருவதாகக் கூறப்பட்டது.
பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் எஸ்ஐஏ நிறுவனம் சொன்னது.
விஸ்தாராவில் எஸ்ஐஏவுக்கு 49 விழுக்காடு பங்கு உள்ளது. எஞ்சிய 51 விழுக்காடு டாட்டா குழுமத்திற்குச் சொந்தமானது.


