சிங்கப்பூரில் முதல்முறையாக உரிமம் பெற்ற கால்நடை மருத்துவமனை திறப்பு

1 mins read
0c87f367-0def-41ad-941d-10a47f4ebeb8
(மேல்படம்) 232 விட்லி ரோட்டில் 24 மணி நேரமும் செயல்படும் புதிய கால்நடை மருத்துவமனையில் மருத்துவச் சிக்கலுடைய கால்நடைக்கான சிறப்புப் படுக்கைப் பிரிவுகளும் (இடது) பரிசோதனைக் கூடங்களும் (வலது) அமைக்கப்பட்டுள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

செல்­லப்­பி­ரா­ணி­க­ளின் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக்­கென அவ­சர சிகிச்சை மற்­றும் நிபு­ணத்­துவ சிகிச்சை வழங்­கும் புதிய கால்­நடை மருத்­து­வ­மனை நேற்று அதி­கா­ர­பூர்­வ­மா­கத் திறந்து வைக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரின் உரி­மம் பெற்ற முதல் கால்­நடை மருத்­து­வ­மனை இது­வா­கும். கால்­நடை அவ­சர, நிபு­ணத்­துவ பிரி­வுக்­கான மருத்­து­வ­மனை அதா­வது 'விஇ­எஸ்', 2023ஆம் ஆண்­டில் அதன் சேவை­களை­யும் மனி­த­வ­ளத்­தை­யும் மேலும் 30% அதி­க­ரிக்­கும் என்று கூறப்­ப­டு­கிறது.

'விட்லி' வட்­டா­ரத்­தில் அமைந்­துள்ள இப்­பு­திய மருத்­து­வ­ம­னை­யில் அவ­ச­ர­கால பரா­ம­ரிப்­பும் கடு­மை­யான பாதிப்­பு­க­ளுக்­கான பரா­ம­ரிப்­பும் வழங்­கப்­படும்.

அத்­து­டன் அறுவை சிகிச்சை செய்­யும் வச­தி­யும் உண்டு. தங்­கள் பரா­ம­ரிப்­பில் விடப்­படும் விலங்­கு­களுக்கு ஊடு­க­திர் (எக்ஸ்‌ரே) இயந்­தி­ரங்­களும் 'எம்­ஆர்ஐ' சேவை­களும் புதிய மருத்­து­வ­ம­னை­யில் வழங்­கப்­ப­டு­கின்­றன.

தற்­போது இந்த மருத்­து­வ­ம­னை­யில் 23 கால்­நடை மருத்­து­வர்­கள் உள்­ள­னர். 12,000 சதுர அடி அள­வி­லான இந்த மருத்­து­வ­மனை கிட்­டத்­தட்ட 12 நான்­கறை வீவக வீடு­களுக்­குச் சமம் என்று கூறப்­ப­டு­கிறது. இங்கு 80 விலங்­கு­கள் சிகிச்சை பெற­லாம் என்று தெரி­விக்­கப்­பட்­டது.