ஆசியான், இந்தியா உறவை ஆராயும் நூல் வெளியிடப்பட்டது

ஆசியான், இந்தியா உறவை ஆராயும் நூல் வெளியிடப்பட்டது

1 mins read
05db64ec-b407-432e-b433-0462847d6111
(இடமிருந்து) திரு ஹெர்நாயக் சிங், ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங், பேராசிரியர் டோமி கோ, திருவாட்டி மோ துஸார் ஆகியோர் நூல் வெளியீட்டில் கலந்துகொண்டனர். படம்: என்யுஎஸ் தெற்காசிய கல்வி ஆய்வுக் கழகம் -

ஆசி­யா­னுக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடை­யி­லான உறவை ஆரா­யும் வகை­யில் வெவ்­வேறு விவ­கா­ரங்­களை எடுத்­துச்­சொல்­லும் நூலாக 'ஆசி­யான் அண்ட் இந்­தியா: த வே ஃபார்வர்ட்' (ASEAN and India: The Way Forward) நேற்று முன்­தி­னம் தேசிய நூல­கத்­தில் வெளி­யி­டப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரின் ஓய்­வு­பெற்ற கௌரவ மூத்த அமைச்­சர் கோ சோக் டோங் நூலை வெளி­யிட்­டார். 300 பக்­கங்­க­ளு­டைய இந்த நூலை பேரா­சி­ரி­யர் டோமி கோ, திரு ஹெர்­நா­யக் சிங், திருவாட்டி மோ துஸார் ஆகியோர் இணை ஆசிரியர்களாக உருவாக்கியுள்ளனர்.

நூலில் மொத்­தம் 42 இந்­தி­யர்­களும் தென்­கி­ழக்­கா­சி­யர்­களும் தங்­க­ளின் கண்­ணோட்­டத்­தில் ஆசி­யான், இந்­தியா தொடர்­பான விவ­கா­ரங்­க­ளைப் பற்றி கருத்து தெரி­வித்­துள்­ள­னர்.

இரு­த­ரப்பு உறவை மேலும் எவ்­வாறு உயர்த்­த­லாம் என்­ப­தற்­கான வழி­களை ஆராய்­வ­தற்கு இந்த நூல் வழி வகுக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஆசி­யான், இந்­தியா உற­வு­கள் கடந்த பல நூற்­றாண்­டு­களில் அடைந்­துள்ள மாற்­றத்­தில் தொடங்கி இரு­த­ரப்­பும் ஒன்­றி­ணை­யும் அம்­சங்­கள் நூலில் எடுத்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளன. பின்­னர், எதிர்காலத்தில் ஒத்­து­ழைப்பை மேம்­ப­டுத்­தும் அம்­சங்­க­ளை­யும் நூல் ஆராய்­கிறது.