'புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிடுவது தொடர்பில் கடுமையான சட்டங்கள் இருந்தால் மட்டும் போதாது'

'புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிடுவது தொடர்பில் கடுமையான சட்டங்கள் இருந்தால் மட்டும் போதாது'

1 mins read
169024cb-e9cd-480a-9ab6-75b2c3837d0a
-

புகை­பி­டிக்­கும் பழக்­கத்தை நியூ­சிலாந்­தில் இருக்­கும் ஒரு­வர் கைவி­டு­வ­தற்­குக் கடு­மை­யான சட்­டங்­கள் இருந்­தால் மட்­டும் போதாது. சமூ­கத்­தி­ன­ரை­யும் ஈடு­ப­டுத்தி சிக­ரெட் புகை­யற்ற ஓர் எதிர்­கா­லம் அவர்­களுக்­காக காத்­தி­ருப்­ப­தைச் சுட்­டிக் காட்ட வேண்­டும் என்று நியூ­சி­லாந்து சுகா­தா­ரத் துணை அமைச்­சர் அயிஷா வெர்­ரால் கூறினார்.

புகை­யி­லைக் கட்­டுப்­பாடு தொடர்­பான கலந்­து­ரை­யா­டல் நிகழ்ச்சி, செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் சோ சுவீ ஹாக் பொது சுகா­தா­ரக் கழ­கத்­தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­த­போது அதில் அவர் இவ்­வாறு கூறி­னார். நியூ­சிலாந்து 2025ஆம் ஆண்­டுக்­குள் சிக­ரெட் புகை­யற்ற ஒரு நாடாக மாறும் இலக்­கைக் கொண்­டுள்­ளது.

தற்­போது அங்கு புகை­பி­டிக்­கும் 9 விழுக்­காட்­டி­னரை, 5 விழுக்­காட்­டி­ன­ரா­கக் குறைக்க அந்­நாடு திட்­ட­மிட்­டுள்­ளது. இதற்­கி­டையே, நியூ­சி­லாந்து இளை­ய­ரி­டையே புகை­பிடிக்­கும் பழக்­கம் கணி­ச­மான அளவு குறைந்­தி­ருந்­தா­லும் 'வேப்­பிங்' எனப்­படும் மின்­சி­க­ரெட் பழக்­கம் பெரும் பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுத்து வரு­வ­தா­கக் கூறப்­பட்­டது.

நியூ­சி­லாந்து இளை­யர்­களில் 10 முதல் 20 விழுக்­காட்­டி­னர் மின்­சி­க­ரெட்­டு­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தைத் தாங்­கள் அறிந்­துள்­ள­தா­க­வும் அதன் தொடர்­பில் கட்­டுப்­பா­டு­க­ளைக் கடு­மை­யாக்க வேண்­டி­யுள்­ள­தா­க­வும்," டாக்­டர் வெர்­ரால் கூறி­னார். இருப்­பி­னும், அதைத் தடை செய்­ய­மாட்­டோம் என்­றார் அவர்.

சிங்­கப்­பூ­ரில் மின்­சி­க­ரெட்­டு­களைப் பயன்­ப­டுத்­து­வ­தும் விற்­பனை செய்­வ­தும் 2018ஆம் ஆண்டு பிப்­ர­வரி 1ஆம் தேதி முதல் தடை­செய்­யப்­பட்­டுள்­ளது.

இளை­ய­ரி­டையே காணப்­படும் 'வேப்­பிங்' பழக்­கத்­தைச் சமா­ளிக்க, சட்­டங்­கள், அம­லாக்­கம், பொதுக் கல்வி, மன­நல ஆலோ­சனை ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கிய பல்­முனை அணு­கு­மு­றையை சிங்­கப்­பூர் கையாண்டு வரு­கிறது.