உலக சுகாதார அமைப்பின் தலைவருடன் விவியன் பாலகிருஷ்ணன் சந்திப்பு

வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன், உலக சுகா­தார அமைப்­பின் தலைமை இயக்­கு­நர் டெட்­ரோஸ் அதானோம் கெப்­ரி­யே­சஸை ஜெனி­வாவில் நேற்று சந்­தித்து, உல­க­ளா­விய சுகா­தார விவ­கா­ரங்­கள் பற்றி ஆழ்ந்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ள­ளார். வெளி­யு­றவு அமைச்சு இதைத் தெரி­வித்­தது.

கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான உல­க­ளா­வி­யக் கண்­கா­ணிப்பு, வெளிப்­ப­டைத்­தன்மை அதி­க­ரித்­தல், தவ­றான தக­வல்­களை எதிர்­கொள்­ளு­தல், எதிர்­கா­லப் பெருந்­தொற்­று­க­ளுக்கு ஆயத்­த­மாய் இருத்­தல் ஆகி­ய­வை முக்­கி­யம் என்று அவர்­கள் இரு­வ­ரும் ஏற்­றுக்­கொண்­ட­னர்.

கொவிட்-19 பெருந்­தொற்றை உலக சுகா­தார அமைப்பு கையாண்ட விதத்தை டாக்­டர் விவியன் பாராட்­டி­னார்.

மாறி­வ­ரும் சுகா­தா­ரச் சூழ­லில் அமைப்­புக்கு சிங்­கப்­பூ­ரின் முழு ஆத­ரவை அவர் தெரி­வித்­தார்.

தொடர்ந்து கடு­மை­யா­கப் பரி­சோ­தித்­தல், கிரு­மி­யின் மர­ப­ணுக் கூறு­களை வரி­சைப்­ப­டுத்­து­தல் உள்­ளிட்­ட­வற்­றைச் செய்து, சிங்­கப்­பூர் அதன் உள்­ளூர் கிரு­மித்­தொற்று நில­வ­ரத்­தைச் சுறு­சு­றுப்­பு­டன் கையாள்­வதை டாக்­டர் டெட்­ரோஸ் ஏற்­றுக்­கொண்­டார்.

டாக்­டர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் ஜெனிவா அறி­வி­யல் அர­ச­தந்­திர முன்­னோக்கு மாநாட்­டில் கலந்­து­கொள்ள நேற்­று­முன்­தி­னம் அங்­கு சென்­றார். இன்று அவர் நாடு திரும்­புவார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!