ஈசூனில் புதிய 'டிஸ்லெக்சியா' கற்றல் நிலையம்

ஈசூனில் புதிய 'டிஸ்லெக்சியா' கற்றல் நிலையம்

1 mins read
1579a534-76aa-42a6-a4af-589de44ef3ce
மூத்த உள்துறை துணை அமைச்சர் முகம்மது ஃபைஷல் இப்ராஹிம் நேற்றைய நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர் டிஸ்­லெக்­சியா சங்­கம், ஈசூ­னில் $300,000 செல­வில் அதன் புதிய கற்றல் நிலை­யத்­தைத் திறந்­துள்­ளது.

சங்­கம் ஈசூ­னில் முன்பு நடத்தி­ வந்த நிலை­யத்­தில் தங்­கள் பிள்­ளை­க­ளைச் சேர்க்க விரும்­பிய சில பெற்­றோர் சிர­மங்­களை எதிர்­நோக்­கி­னர். சிலர் தங்­கள் பிள்ளை சேர்த்­துக் கொள்­ளப்­ப­டு­வ­தற்கு இரண்­டிலிருந்து நான்கு மாதங்­கள் வரை காத்­தி­ருந்­த­னர். சிலர் வேறு நிலை­யங்­க­ளுக்கு அனுப்­பி ­வி­டப்­பட்­ட­னர்.

தற்­போது அப்­பி­ரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வாக புதிய நிலை­யம் அமை­யும் என்று சங்­கத்­தின் தலைமை நிர்­வாகி லீ சியாங் நேற்று அதன் திறப்­பு­வி­ழா­வில் கூறி­னார். புதிய நிலை­யம் ஈசூன் அவென்யூ ஐந்து புளோக் 741ல் அமைந்­துள்­ளது. அதில் எட்டு வகுப்­ப­றை­களும் கற்­றல் குறை­பா­டுள்ள சிறு­வர்களுக்­குத் தேவை­யான, குறைந்த விளக்கு வெளிச்­சம் போன்ற வச­தி­களும் உள்­ளன. புதிய நிலை­யம் மார்ச் மாதத்­தில் செயல்­ப­டத் தொடங்­கி­ய­தி­லி­ருந்து மாண­வர் சேர்க்கை 17 விழுக்­காடு அதி­க­ரித்­துள்­ள­து.

சிங்­கப்­பூர் டிஸ்­லெக்­சியா சங்­கம் கற்­றல் குறை­பா­டுள்­ள­வர்­ களுக்­காக தீவு­மு­ழு­வ­தும் 13 நிலை­யங்­களை நடத்தி வருகிறது.