இங் எங் ஹென்: பன்னாட்டுப் பாதுகாப்பு சிக்கல்களுக்கு எதிராக தற்காத்துக்கொள்ள வேண்டும்

இங் எங் ஹென்: பன்னாட்டுப் பாதுகாப்பு சிக்கல்களுக்கு எதிராக தற்காத்துக்கொள்ள வேண்டும்

3 mins read
71185d01-336a-40f6-8bc9-082fcab0b257
-

ஆ. விஷ்ணு வர்­தினி

நிலை­யற்ற கால­கட்­டத்தை எதிர்­நோக்­கி­யுள்ள சிங்­கப்­பூர் உல­கில் அதி­க­ரித்து வரும் பாது­காப்பு சிக்­கல்­க­ளுக்கு எதி­ராக கூடு­மா­ன­வரை தயா­ராக வேண்­டும் என்று தற்­காப்பு அமைச்­சர் டாக்­டர் இங் எங் ஹென் கூறி­யுள்­ளார்.

கிரேண்ட் கார்ப்­தோர்ன் வாட்­டர்­ஃபி­ரண்ட் ஹோட்­ட­லில் நேற்று நடை­பெற்ற தற்­காப்பு அமைச்­சின் இவ்­வாண்­டுக்­கான தொண்­டூ­ழி­யர் பாராட்டு விழா­வில் அமைச்­சர் பேசி­னார்.

ஐரோப்பா-ரஷ்யா, அமெ­ரிக்கா-சீனா ஆகி­ய­வற்­றுக்கு இடையே ஏற்­பட்­டுள்ள நம்­பிக்­கைக் குலைவை குறிப்­பிட்ட டாக்­டர் இங், சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டையே நில­வும் நம்­பிக்­கையே நம் தற்­காப்­புக்­கான முக்­கிய வள­மாய் உள்­ள­தா­கக் கூறி­னார்.

நோய்ப்­ப­ர­வல் கார­ணத்­தால் மூன்று ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு தொண்­டூ­ழி­யர் பாராட்டு விழா நேற்று நடை­பெற்­றது.

அதில் 315 தொண்­டூ­ழி­யர் களுக்கு நன்றி தெரி­வித்­த­தோடு, 96 தொண்­டூ­ழி­யர்­க­ளுக்கு நிய­மன, மறு-நிய­மன சான்­றி­தழ்­களை அளித்­தார் டாக்­டர் இங்.

தாக்­கு­தல்­க­ளின்­போது எல்லா உறுப்­பி­னர்­க­ளுக்­கும் உதவி கிட்­டும் என உறு­தி­ய­ளிக்­கும் நேட்­டோ­வின் ஒப்­பந்­தத்தை குறித்து பேசிய அமைச்­சர், "நமது வாழ் நாளில் நேட்டோ அதன் ஐந்­தாம் பிரிவை அமல்­ப­டுத்­தப்­படும் வாய்ப்பு கட்­டா­யம் உள்­ளது," என்­றார்.

பனிப்­போ­ரின் முடி­வுக்­குப் பிறகு தற்­போது அமெ­ரிக்க-சீன உற­வு­கள் ஆக மோச­மாக இருக்­கும் நிலை­யில், அவை மேலும் மோச­ம­டை­யு­மா­னால் சிங்­கப்­பூர் உள்­ளிட்ட ஆசி­யான் நாடு­கள் ஏதா­வது ஒரு தரப்­புக்கு ஆத­ரவு தெரி­விக்க விரும்­ப­மாட்டா.

ஆனால், 5ஜி, வர்த்­த­கம், பாது­காப்பு குறித்த விவ­கா­ரங்­கள் பாதிக்­கப்­ப­டும்­போது ஒரு நாட்­டிற்கு ஆத­ரவு தெரி­விக்­கா­மல் இருப்­பது கடி­ன­மாக இருக்­கும் என்று டாக்­டர் இங் குறிப்­பிட்­டார்.

இத்­த­கைய சூழ் நிலை­கள் அதி­க­ரித்து வரும் நிலை­யில், ஐரோப்­பா­வி­லும் ஆசி­யா­வி­லும் ராணு­வ­ம­ய­மா­கும் போக்கு அதி­க­ரிக்­கும் என்று அவர் சுட்­டி­னார்.

"ராணு­வச் செல­வி­னம் உய­ரும். தாக்­கு­தல்­க­ளைத் தடுக்­கத் தேவை­யான நம்­பிக்கை இல்­லா­மல், நேரடி மோதல்­க­ளுக்­கான வாய்ப்­பு­கள் கூடும்," என்று அவர் கூறி­னார்.

உக்­ரேன் போரை மேற்­கோள் காட்­டிய அவர், "போர் அழி­வு­களை உண்­டாக்­கும். எச்­சூழ்­நி­லை­யி­லும் அதில் சிக்­கி­வி­டக்­கூ­டாது. ஆனால், சச்­ச­ர­வு­கள் ஏற்­பட்­டால், நமது மக்­க­ளி­டையே உள்ள ஒற்­று­மையே நமது நாடு மீள்­வதை நிர்­ண­யிக்­கும்," என்­றும் சொன்­னார்.

தேசிய சேவை தொடங்­கிய 55ஆவது நினை­வாண்டை சிங்­கப்­பூர் இவ்­வாண்டு கொண்­டா­டும் வேளை­யில், பெரும்­பா­லான சிங்­கப்­பூ­ரர்­கள் தேசிய சேவைக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­தாக தற்­காப்பு அமைச்­சின் கருத்­தாய்­வு­கள் தொடர்ந்து காட்டி வரு­கின்­றன.

கடந்த ஆண்டு ஆய்­வில் கலந்து­ கொண்ட சிங்­கப்­பூ­ரர்­களில் 96 விழுக்­காட்­டி­னர், தேசிய சேவை நாட்­டின் தற்­காப்­புக்­கும் பாது­காக்க அவ­சி­யம் என்று மறு­உ­று­திப்படுத்­தி­யதை அமைச்­சர் சுட்­டி­னார்.

தற்­காப்பு அமைச்சு, ஆயு­தப் படை­யின் ஊழி­யர்­களும் தொண்­டூ­ழி­யர்­களும், கிரு­மித்­தொற்­றின்­போது பல வகை­களில் உத­வி­னர். அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­களை பொட்­ட­ல­மி­டு­தல், கிருமி தொற்­றி­ய­வர்­க­ளு­டன் தொடர்­பு­கொண்­ட­வர் களைக் கண்­ட­றி­தல், நோய் கண்­ட­றி­யும் சாத­னங்­க­ளைத் தயா­ரித்­தல், சமூ­கப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­க­ளை­யும் முகக்­க­வ­சம் விநி­யோ­கிக்­கும் நிலை­யங்­க­ளை­யும் வழி­ந­டத்­து­தல் முத­லி­ய­வற்­றில் அவர்­கள் பங்­க­ளித்­த­தாக டாக்­டர் இங் கூறி­னார்.

அது தவிர, சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்­பை­யும் நீடித்த நிலைத்­தன்­மை­யை­யும் முக்­கிய குறிக்­கோ­ளாக கொண்டு ஆயு­தப்­ப­டை­யும் தற்­காப்பு அமைச்­சும் தொடர்ந்து பணி­யாற்றி வரு­வ­தாக அமைச்­சர் கூறி­னார்.

இத்­த­கைய கட­மை­யு­ணர்வு உள்ள தேசிய சேவை­யா­ளர்­க­ளை­யும் ஆயு­தப்­படை, தற்­காப்பு அமைச்சு ஆகி­ய­வற்­றின் தொண்­டூ­ழி­யர்­க­ளை­யும் காணும்­போது, சிங்­கப்­பூர் சிக்­கல்­களை கையாண்டு வெல்­லும் என்ற நம்­பிக்கை ஏற் ­ப­டு­வ­தா­க­வும் அமைச்­சர் கூறி­னார்.