ஜோகூர் பால விபத்தில் சிக்கிய பல வாகனங்கள்; இரண்டு மணிநேர தாமதம்

ஜோகூர் பால விபத்தில் சிக்கிய பல வாகனங்கள்; இரண்டு மணிநேர தாமதம்

1 mins read
84c460c9-c52b-4bdc-962c-029199daa6d9
ஜோகூர் பாலத்தில் நேற்று ஏற்பட்ட விபத்தில் சிக்கிய கார்களில் ஒன்று. படம்: மலேசியா சிங்கப்பூர் பார்டர் கிராசர்ஸ்/ஃபேஸ்புக் -

ஜோகூர் பாலத்­தில் பல லாரி­களும் குறைந்து இரண்டு வாக­னங்­களும் நேற்று விபத்­தில் சிக்­கின.

அத­னால் சுமார் இரண்டு மணி­நே­ரத்துக்கு ஜோகூர் பாலத்­தில் போக்­கு­வ­ரத்து நெரி­சல் ஏற்­பட்­டது.

விபத்­தில் சிக்­கிய வாக­னங்­களில் ஒன்று மோச­மாக சேத­ மடைந்­தி­ருப்­ப­தைக் காட்­டும் புகைப்­ப­டம் சமூக ஊட­கங்­களில் பகி­ரப்­பட்­டது. இரண்டு லாரி­க­ளுக்­கி­டையே வாக­னம் சிக்­கிக்­கொண்­டி­ருப்பதைப் புகைப்­ப­டம் காட்­டி­யது.

மேலும் ஒரு வாக­னமும் சேத­ம­டைந்­தா­கக் கூறப்­பட்­டது. இத­னால் ஜோகூரி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வரும் வழியில் போக்­கு­வ­ரத்து தாம­த­ம­டைந்­தது.

விபத்­தால் மூன்று தடங்­களில் இரண்டு மூடப்­பட்­ட­தாக குடி­நு­ழைவு சோத­னைச் சாவ­டி­கள் ஆணை­யம் அதன் ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று காலை 9.45 மணி­ய­ள­வில் தெரி­வித்­தது. உட்­லண்ட்ஸ் சோத­னைச்­சா­வடி வழி­யாக சிங்­கப்­பூர் வரு­வோ­ருக்­குத் தாம­தம் ஏற்­படும் என்­றும் அது எச்­ச­ரித்­தது.

விபத்­துக்கு உள்­ளான வாக­னங்­கள் அகற்­றப்­பட்­ட­தாக ஆணை­யம் காலை 11 மணிக்­குத் தெரி­வித்­தது. போக்­கு­வ­ரத்து வழக்­க­நி­லைக்கு திரும்­பி­ய­தாக பின்­னர் அது கூறி­யது.