80 விழுக்காட்டு ‘எஸ்ஐடி’ பட்டதாரிகளுக்கு பட்டம் பெறும் முன்னரே முழுநேர வேலை

சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கழ­கத்­தில் (எஸ்­ஐடி) இவ்­வாண்டு பட்­டம் பெறும் மூன்­றில் இரண்டு பட்­ட­தா­ரி­கள் பட்­டம் பெறும் முன்­னரே முழு­நேர வேலை­யில் சேர்ந்­து­விட்­ட­னர். மருந்­தி­யல் பொறி­யி­யல், தக­வல்­தொ­டர்­புத் தொழில்­நுட்­பம், சுகா­தா­ரத் துணைச் சேவை­கள், கட்­டு­மான உள்­ள­மைப்பு போன்ற சில குறிப்­பிட்ட துறை­களில் பட்­டம் பெற்ற பத்­தில் ஒன்­பது பேருக்கு பட்­டம் பெறும் முன்­னரே, முழு­நேர வேலை கிடைத்­து­விட்­டது.

எஸ்ஐடியின் நேற்­றைய பட்­ட­ம­ளிப்பு நிகழ்ச்சியில் அதன் தலை­வர் சுவா கீ சாய்ங் இதைத் தெரி­வித்­தார். கழ­கம் இவ்­வாண்டு பட்­டம் பெறும் தன் மாண­வர்­களில் சுமார் 1,700 பேரி­டம் நடத்­திய கருத்­தாய்­வில் அத்­த­க­வல்­கள் தெரிய வந்­த­தாக அவர் கூறி­னார்.

நேற்று நடந்த இரண்டு பட்­ட­ ம­ளிப்பு நிகழ்ச்­சி­களில், கதிர்­வீச்சு சிகிச்சை, உடற்­ப­யிற்சி சிகிச்சை ஆகிய இரண்டு துறை­க­ளை­யும் சேர்ந்த 380 பேர் பட்­டம் பெற்­ற­னர்.

எஸ்­ஐ­டி­யில் இவ்­வாண்டு 47 இள­நிலை, முது­நிலை பட்­டக்­கல்­வித் துறை­க­ளைச் சேர்ந்த 2,200க்கும் அதி­க­மான மாண­வர்­கள் பட்­டம் பெறு­கின்­ற­னர். இது கழ­கத்­தில் பட்­டம் பெறும் ஆகப் பெரிய எண்­ணிக்கை ஆகும்.

இவ்­வாண்டு பட்­ட­ம­ளிப்பு விழா­வில் எஸ்­ஐடி அதன் முதல் கௌரவ முனை­வர் பட்­டத்தை அதன் அறங்­கா­வ­லர் குழு உறுப்­பி­ன­ரான திரு இங் யாட் சங்­குக்கு வழங்­கி­யது.

செயல்­மு­றைக் கல்வி சார்ந்த சிங்­கப்­பூ­ரின் முதல் பல்­க­லைக்­க­ழ­க­மாக எஸ்­ஐ­டியை வளர்த்­தெ­டுத்­த­தில் அவர் ஆற்­றிய பங்­குக்­காக அப்­பட்­டம் அளிக்­கப்­பட்­டது.

நேற்­றைய நிகழ்ச்­சி­யில் கலந்­து­ கொண்டு பேசிய துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங், சுகா­தார துணை நிபு­ணர்­கள் வளர்ந்­து­வ­ரும் சுகா­தா­ரப் பராமரிப்­புத் துறை­யில் குறிப்­பாக சிங்­கப்­பூ­ரின் மூப்­ப­டை­யும் மக்­க­ளுக்கு உத­வு­வ­தில் முக்­கி­ய பங்­காற்­று­வர் என்­றார்.

"வேலை­வாய்ப்­பு­டன், வாழ்க்­கைத் தொழி­லில் தொடர்ச்­சி­யான வளர்ச்சி, உரு­மாற்­றம், கற்­றல் ஆகி­ய­வற்றை நீங்­கள் எதிர்­பார்க்­க­லாம். உதா­ர­ணத்­துக்கு, கதிர்­வீச்சு துறை­யில் நோயைக் கண்­ட­றி­தல் சிகிச்சை ஆகி­ய­வற்­றில் தொழில்­நுட்ப மேம்­பாட்­டால் புரட்சி ஏற்­ப­டக் கூடும்," என்­றார் திரு வோங். அதே நேரத்தில் வேலை முழுவதும் புதிய திறன்களையும் புதிய செயல் முறைகளையும் அவர்கள் கற்பது அவசியம் என்று அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!