ஏறத்தாழ மேலும் 10,500 மாணவருக்கு நிதி ஆதரவு

ஏறத்தாழ மேலும் 10,500 மாணவருக்கு நிதி ஆதரவு

3 mins read
552062b5-8df9-4081-83ad-ec16a3079f30
-

வருமான தகுதி வரம்பு உயரும்; மொத்தம் 135,500 மாணவர்கள் பலனடைவர்

பள்­ளிக்­கூ­டங்­களில் கல்வி கற்க ஆகும் செலவை ஈடு­செய்ய உதவி­யாக நிதி ஆத­ரவு பெற மேலும் சுமார் 10,500 மாண­வர்­கள் தகுதி பெறு­வார்­கள். இதற்­குத் தோதாக நிதி­யு­தவி திட்­டங்­க­ளுக்­கான வருமான தகுதி வரம்பை கல்வி அமைச்சு அதி­க­ரிக்­கிறது.

குடும்ப மொத்த மாத வரு­மான வரம்பு இப்­போது $2,750 ஆக இருக்­கிறது. இது $3,000 ஆக உயர்த்­தப்­படும். தனி­ந­பர் வரு­மான வரம்பு $690லிருந்து $750க்கு கூடும்.

இந்த ஏற்­பாடு வரும் ஜன­வரி மாதத்­தி­லி­ருந்து தொடக்­கப்­பள்ளி, உயர்­நி­லைப் பள்ளி, புகு­முக வகுப்பு மாண­வர்­க­ளுக்குப் பொருந்­தும். சிறப்­புக் கல்விப் பள்­ளிகள், சுயேச்சைப் பள்­ளி­ மாண­வர்­களும் பல­ன­டை­ய­லாம்.

பல­துறை தொழில்­நுட்­பக் கல்லூரி போன்ற உயர்­நி­லைக்­குப் பிந்­திய கல்வி நிலை­யங்­களில் பயி­லும் மாண­வர்­க­ளைப் பொறுத்­த­வரை, குடும்ப வரு­மான வரம்பு மாற்­றம் 2023 கல்வி ஆண்­டில் இருந்து தொடங்­கும்.

இந்­தப் புதிய ஏற்­பாடு கார­ண­மாக நிதி­யு­தவி பெறக்­கூ­டிய மொத்த மாண­வர்­க­ளின் எண்­ணிக்கை ஏறத்­தாழ 135,500 ஆகும் என்று நேற்று கல்வி அமைச்சு அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­தது.

வாழ்க்­கைச் செலவு அதி­க­ரிக்­கிறது. அதைச் சமா­ளிக்க சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு உத­வும் வகை­யில் நேற்று புதிய $1.5 பில்­லி­யன் ஆத­ர­வுத் திட்­டம் அறி­விக்­கப்­பட்­டது.

துணைப் பிர­த­ம­ரும் நிதி­ அமைச்­ச­ரு­மான லாரன்ஸ் வோங், செய்­தி­யா­ளர் மாநாட்­டில் அந்­தத் திட்­டம் பற்றி அறி­வித்­தார். அந்­தத் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக மேலும் மாண­வர்­கள் பல­ன­டை­யக்­கூ­டிய திட்­டம் இடம்பெற்றது.

தொழில்­நுட்­பக் கல்­விக் கழக மாண­வர்­கள் 2023 கல்வி ஆண்டில் இருந்து அர­சாங்க கல்வி உத­வித் தொகை­ மூலம் மேலும் ஆதரவைப் பெறு­வார்­கள்.

குறைந்த வரு­மான குடும்­பத்­தி­ன­ருக்கு அதிக உதவி கிடைக்­கும். குடும்ப மாத வரு­மா­னம் $3,000 ஆக அல்­லது அதற்­கும் குறை­வாக உள்ள குடும்­பங்­க­ளைச் சேர்ந்த முழு­நேர தொழில்­நுட்­பக் கல்­விக் கழக மற்­றும் உயர்­நிலை நைடெக் மாண­வர்­க­ளைப் பொறுத்­த­வரை அவர்­க­ளு­டைய கல்­விக் கட்­ட­ணம் முற்­றி­லும் ஈடு­செய்­யப்­படும்.

இப்­போது அவர்­க­ளுக்கு வரு­டாந்­திர கல்வி உத­வித் தொகை $1,500 ஆக இருக்­கிறது. இது $1,600ஆக உய­ரும்.

பட்­ட­யப் படிப்பு, இள­நிலை பட்டப் படிப்பு மாண­வர்­க­ளுக்­கான கல்வி உத­வித்­தொகை ஏற்­பா­டு­களைத் தான் மறு­ப­ரி­சீ­லனை செய்து வரு­வ­தாக அமைச்சு தெரி­வித்து இருக்­கிறது.

இத­னி­டையே, இந்­தப் புதிய மாற்­றங்­கள் பற்றி நேற்று ஃபேஸ்புக்­கில் கருத்து தெரி­வித்த கல்வி அமைச்­சர் சான் சுன் சிங், மாண­வர்­க­ளின் பின்­னணி எப்­படி இருந்­தா­லும் அவர்­கள் அனை­வ­ருக்­கும் எட்­டக்­கூ­டிய ஒன்­றாக எப்­போ­துமே கல்வி இருந்து வர­வேண்­டும் என்று கூறி­னார்.

இவ்­வே­ளை­யில், எடு­சேவ் தகுதிக் கல்வி உத­வித்­தொகைக்குத் தகுதி பெறும் வரு­மான வரம்பை $6,900லிருந்து $7,500 ஆக உயர்த்­து­வது பற்றி தான் மறு­ப­ரி­சீ­லனை செய்­யப்­போ­வ­தாக அமைச்சு தெரி­வித்து இருக்­கிறது. இது 2023ஆம் ஆண்­டி­லிருந்து நடப்­புக்கு வரும்.

கல்வி அமைச்சு, 2023 கல்வி ஆண்­டில் இருந்து தகுதி அடிப்­படை­யி­லான தொழில்­நுட்­பக் கல்­விக்கழக ரொக்க கல்வி உப­காரச் சம்­ப­ளத்தை $1,600லிருந்து $1,800க்கு உயர்த்­தும்.