துணைப் பிரதமர்: ஜிஎஸ்டி உத்தரவாத திட்டம் மேம்படும்; விவரங்கள் வரவுசெலவுத் திட்டம் 2023ல் இடம்பெறும்

துணைப் பிரதமர்: ஜிஎஸ்டி உத்தரவாத திட்டம் மேம்படும்; விவரங்கள் வரவுசெலவுத் திட்டம் 2023ல் இடம்பெறும்

2 mins read
2dbe4ec9-9378-40bd-957c-5947094a17a7
ஜிஎஸ்டி வரும் ஜன­வரி 1ஆம் தேதி முதல் 1% கூடி 8% ஆக இருக்­கும். பிறகு 2024 ஜன­வரி 1ஆம் தேதி முதல் 1% கூடி 9% ஆகும். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

சிங்­கப்­பூ­ரில் விரை­வில் ஜிஎஸ்டி வரி உயர்வு இடம்­பெ­ற­வி­ருக்­கிறது. அந்த உயர்வு கார­ண­மாக ஏற்­ப­டக்­கூ­டிய தாக்­கத்தை ஈடு­செய்ய $6.6 பில்­லி­யன் ஆத­ர­வுத் திட்­டம் அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

இப்­போது பண­வீக்­கம் எதிர்­பார்க்­கப்­பட்­ட­தை­விட அதி­க­மாக இருக்­கிறது. இதைக் கருத்­தில்­கொண்டு அந்த ஆத­ர­வுத் திட்­டம் அதற்­கேற்ப மேம்­ப­டுத்­தப்­படும் என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் நேற்று அறி­வித்­தார்.

விவ­ரங்­கள் 2023 வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் இடம்­பெ­றும் என்று நேற்று செய்­தி­யா­ளர்­கள் கூட்­டத்­தில் அவர் தெரி­வித்­தார்.

அதி­க­ரிக்­கும் செல­வி­னங்­களை ஈடு­செய்­யும் ஒரு பகு­தி­யாக ஜிஎஸ்டி வரி உயர்வு இரண்டு கட்­டங்­க­ளாக இடம்­பெ­று­கிறது. வரும் ஜன­வரி 1ஆம் தேதி முதல் 1% கூடி ஜிஎஸ்டி 8% ஆக இருக்­கும். பிறகு 2024 ஜன­வரி 1 முதல் 1%கூடி 9% ஆகும்.

ஜிஎஸ்டி வரி உயர்வு கார­ண­மாக ஏற்­ப­டக்­கூ­டிய தாக்­கத்தை ஈடு­செய்ய அர­சாங்­கம் முற்­றி­லும் கடப்­பாடு கொண்டு இருக்­கிறது என்று திரு வோங் நேற்று உறு­தி­பட தெரி­வித்­தார்.

ஜிஎஸ்டி வரி உயர்வு தாக்­கத்தை ஈடு­செய்ய இடம்­பெ­றக்­கூ­டிய உத்­த­ர­வா­தத் திட்­டம் பெரும்­பா­லான சிங்­கப்­பூ­ரர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்கு குறைந்­த­பட்­சம் ஐந்­தாண்­டு­க­ளுக்கு கைகொ­டுக்­கும்.

குறைந்த வரு­மான குடும்­பங்­களைப் பொறுத்­த­வரை அந்த உத­வித் திட்­டம் 10 ஆண்­டு­க­ளுக்கு உத­வும் என்று துணைப் பிர­த­மர் தெரி­வித்­தார்.

வயது வந்த சிங்­கப்­பூ­ரர்­கள் அனை­வ­ருக்­கும் ரொக்­கப் பட்­டு­வாடா, குறைந்த வரு­மான குடும்­பங்­க­ளைச் சேர்ந்த முதி­ய­வர்­களுக்கு ஜிஎஸ்டி பற்­றுச்­சீட்டு ரொக்க பட்­டு­வாடா, ஏறத்­தாழ 950,000 சிங்­கப்­பூர் குடும்­பங்­களுக்கு கூடு­த­லாக ஜிஎஸ்டி பற்­றுச்­சீட்டு பய­னீட்­டுச் செலவு தள்ளு­ ப­டி­கள் எல்­லாம் அந்த உத்­த­ர­வாதத் திட்­டத்­தில் உள்­ள­டங்­கும்.

அர­சாங்­கம் தன்­னு­டைய கடப்­பாட்டை தொடர்ந்து காப்­பாற்­று­வதற்கு ஏது­வாக அந்­தத் திட்­டத்­தின் அளவு, அங்­கங்­கள் எல்­லாம் மறு­பரி­சீ­லனை செய்­யப்­படும் என்று திரு வோங் கூறி­னார்.

பண­வீக்­கம் கூடும் ஒரு நேரத்­தில் ஜிஎஸ்­டி­யும் கூடு­கிறது. இதனால் மக்­கள் கவ­லைப்­ப­டு­கிறார்­கள். தான் இதைப் புரிந்­து­கொள்­வ­தா­கத் தெரி­வித்த திரு வோங், பண­வீக்­கம் மட்­டுப்­ப­டும்­போது ஜிஎஸ்டி வரியை உயர்த்­தலாம் என மக்­கள் விரும்­பக்­கூடும் என்­றார்.

ஆனால், அடுத்த ஆண்­டின் இரண்­டா­வது பாதி­யில்­தான் பண­வீக்­கம் குறை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அப்­படி குறைந்­தா­லும் கடந்த 10 ஆண்டு கால­மாக சிங்கப்­பூ­ரில் நிலவி வந்த மிகக் குறைந்த அள­வுக்கு அது இறங்­காது என்றே தெரி­கிறது.

எதிர்கால பண­வீக்­க நிலை மிக­வும் நிச்­ச­ய­மில்­லா­மல் இருந்து வரு­கிறது என்­பதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார். அடுத்த ஆண்­டில் பண­வீக்­கம் குறைந்­தாலும் அப்­போ­தும் நிச்­ச­ய­மில்­லாத நில­வ­ரம் இருக்­கவே செய்­யும் என்று அவர் தெரிவித்தார்.

உக்­ரேன்-ரஷ்யா போர் மேலும் நீடிக்­கக்­கூ­டும். அல்­லது உணவு, எரி­பொ­ருள் விநி­யோ­கக் கட்­ட­மைப்­பில் புதிய பிரச்­சி­னை­கள் ஏற்­ப­ட­லாம். இவற்­றின் விளை­வாக மேலும் அதிக காலத்­திற்கு அதிக பண­வீக்­கம் இடம்­பெ­றக்­கூ­டிய வாய்ப்பு உண்டு என்­றார் அவர்.