நிறுவனங்களுக்கென புதிதாக உதவித் திட்டங்கள் இல்லை

நிறுவனங்களுக்கென புதிதாக உதவித் திட்டங்கள் இல்லை

1 mins read
88c87901-7771-4794-b89b-78e5f634eb4b
-

பண­வீக்­க பாதிப்பை ஈடு­கட்ட அறி­விக்­கப்­பட்டு இருக்­கும் புதிய ஆதரவுத் திட்­டத்­தில் நிறு­வ­னங்­களுக்கு என்று புதி­தாக உதவித் திட்­டம் எது­வும் இடம்­பெ­ற­வில்லை.

நிறு­வ­னங்­கள் எரி­சக்­தியை மேலும் சிக்­க­னப்­ப­டுத்­தும் அள விற்கு மாறிக்­கொள்ள இந்த ஆண்டு அவற்­றுக்கு ஏற்­கெ­னவே உத­வி­கள் கிடைத்து இருக்­கின்­றன. இதுவே நிறு­வ­னங்­க­ளுக்கு புதிய ஆத­ர­வுத் திட்­டங்­கள் இடம்­பெ­றா­த­தற்­கான கார­ணம் என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் விளக்­கி­னார்.

புதிய திட்­டத்­தில் நிறு­வ­னங்­களுக்குப் புதிய உத­வி­கள் அறி­விக்­கப்­ப­டா­தது ஏன் என்று செய்தி­யா­ளர்­கள் கேட்­ட­தற்­குப் பதி­ல­ளித்த நிதி அமைச்­ச­ரு­மான திரு வோங், நிறு­வ­னங்­க­ளைப் பொறுத்­த­வரை சீர­மைப்­பு­கள் இப்­போது மிக முக்­கி­ய­மா­ன­வை­யாக இருக்­கின்­றன என்­று தெரிவித்தார்.

நிறு­வ­னங்­க­ளின் சீர­மைப்­பும் உரு­மாற்­ற­மும் அர­சாங்­கத்­தின் ஒரு­மித்த கவ­ன­மாக இருந்து வந்­திருக்­கின்றன.

இந்த ஆண்டு வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் அர­சாங்­கம் சில உத­வித் திட்­டங்­களை அறி­வித்­தது.

நிறு­வ­னங்­க­ளுக்கு உதவ ஏற்­கெ­னவே பல திட்­டங்­களும் நடப்­பில் உள்­ளன.

வரும் வர­வு­செ­ல­வுத் திட்­டத்­தில் நிறு­வ­னங்­க­ளுக்கு இதர உத­வித் திட்­டங்­களை இடம்­பெ­றச் செய்ய முடி­யுமா என்­பது பற்றி ஆரா­யப்­படும் என்­றும் திரு வோங் குறிப்­பிட்­டார்.