தாய்லாந்து மருத்துவ செய்தித் தளமான 'ஹார்ட்வேர்ஸோன் ஃபாரம்', எதிர்க்கட்சி அரசியல்வாதி கோ மெங் செங் ஆகியோருக்கு கொவிட்-19 எக்ஸ்பிபி உருமாறிய கிருமி தொடர்பில் தவறான தகவல்களை வெளியிட்டதற்காக 'பொஃப்மா' சட்டத்தின் கீழ் திருத்தங்களை வெளியிட உத்தரவிடப்பட்டது. கோ மெங் செங் மக்கள் சக்தி கட்சியின் ஃபேஸ்புக் பக்கத்திலும் திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. 'ஹார்ட்வேர்ஸோன் ஃபாரம்', இணையத்தளத்தில் அக்டோபர் 9ஆம் தேதி 'பிரேக்கிங்!' என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் "புதிய ஸார்ஸ்-கோவ்-2 எக்ஸ்பிபி கிருமியால் சிங்கப்பூர் தாக்குதலுக்கு உள்ளாகி யது. அடுத்தது தாய்லாந்து," என எச்சரிக்கப்பட்டது.
'ஹார்ட்வேர்ஸோன் ஃபாரம்' ஃபேஸ்புக், டுவிட்டர் பக்கத்திலும் இந்தத் தகவல் வெளியானது.
"எக்ஸ்பிபி உருமாறிய கிருமி முந்தைய கிருமிகளைவிட கடுமை யான காய்ச்சலை ஏற்படுத்தும் என்பதற்கான ஆதாரமில்லை," என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.

