சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயில் வெள்ளி ரதம், இரண்டாண்டு இடை வெளிக்குப் பிறகு இந்த ஆண்டு மீண்டும் குடியிருப்புப் பேட்டைகளுக்குச் சென்றது.
முதல் நாளான நேற்று ஸ்ரீ மாரியம்மன் வீற்றிருக்கும் வெள்ளி ரதம் எவர்ட்டன் பார்க், ஜாலான் புக்கிட் மேரா, புக்கிட் பெர்மாய், தெலுக் பிளாங்கா ரைஸ் ஆகிய இடங்களுக்குச் சென்று, பக்தர்களின் காணிக்கைகளை ஏற்றுக்கொண்டு ஆலயம் திரும்பியது.
இன்று வெள்ளி ரதம் தெலுக் பிளாங்கா ஹைட்ஸ், ஸ்ரீ ருத்ர காளியம்மன் கோயில், ஹோய் ஃபாட் ரோடு, புக்கிட் மேரா வியூ ஆகிய இடங்களுக்குச் சென்று ஆலயம் திரும்பும். படம்: த.கவி

