ஃபெலிசியா டியோவின் உடலை எரித்தவருக்குச் சிறை

திரு­வாட்டி ஃபெலிசியா டியோ­வும் அவ­ரது இரண்டு நண்­பர்­களும் எக்ஸ்­டசி உண்ட போதை­யில் இருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. அந்த சம­யத்­தில் மர­ண­ம­டைந்த ஃபெலி சியா டியோ­வின் உடலை நண்­பர்­கள் எடுத்­துச் சென்று சட்­ட­வி­ரோ­த­மாக எரித்து மறைத்­து­விட்­ட­னர்.

கடந்த 2007ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடை­பெற்ற இந்­தச் சம்­ப­வத்­தில் நண்­பர்­களில் ஒரு­வ­ரான அஹ­மட் டேனி­யல் முஹ­மட் ரஃபிக்கு, 37, நேற்று 26 மாதங்­கள் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. தன் மீது சுமத்­தப்­பட்ட நான்கு குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் அவர் ஒப்­புக்கொண்­டார்.

அஹ­மட்­டும் அவ­ரு­டன் இந்­தோ­னீ­சி­யா­வைச் சேர்ந்த ரகில் புத்ரா செடியா சுக்­மா­ரா­ஜ­னா­வும் ஃபெலிசி­யா­வின் உடலை ஒரு பெட்­டி­யில் அடைத்து பொங்­கோல் பாதை 24க்கு எடுத்­துச் சென்­ற­னர். அங்கு பள்­ளம் தோண்­டிய இரு­வ­ரும் பெட்­டி­யைப் போட்டு எரித்து மூடி­விட்­ட­னர். இந்­தச் சம்­ப­வத்­தில் தொடர்­பு­டைய இந்­தோ­னீ­சி­யர் இன்­ன­மும் தேடப்­பட்டு வரு­கி­றார்.

பொது இடங்­களில் சட்­ட­வி­ரோ­த­மாக உடலை எரித்­தது, நேர்­மை­யற்ற முறை­யில் அவ­ரது பொருள்­களைக் கையா­டி­யது, இரு காவல்­துறை அதி­கா­ரி­க­ளி­டம் பொய் சாட்­சி­யங்­க­ளைக் கூறி­யது, பொய் சாட்­சி­யங்­களை உரு­வாக்­கி­யது ஆகிய நான்கு குற்­றச்­சாட்­டு­கள் அஹ­மட் மீது கொண்டு வரப்­பட்­டது. தவ­றான தக­வல்­களை வழங்­கி­யது, அரசு அதி­கா­ரி­க­ளி­டம் தக வல்களை மறைத்­தது ஆகிய இதர இரண்டு குற்­றச்­சாட்­டு­களையும் நீதி­மன்­றம் கவ­னத்­தில் எடுத்துக் கொண்­டது.

அஹமட்டுக்கு 26 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும் அவர் விரைவில் விடு விக்கப்டுவார் என எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த 2020 டிசம்பர் 15ஆம் தேதியிலிருந்து அவர் சிறையில் இருந்து வருகிறார்.

அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை அவர் சிறையில் அடைக்கப்பட்ட காலத்தி லிருந்து தொடங்குவதால் 26 மாதச் சிறைத் தண்டனை முடியும் தறு வாயில் உள்ளது. இதன் காரணமாக அவர் விரைவில் விடுவிக்க வாய்ப்பு உள்ளது. 2007 ஜூன் 30ஆம் தேதி விடியற்காலையில் அப்போது 22 வயதான அஹமட், இந்தோனீ சியரான, அப்போது 18 வயதான ரகில் புத்ரா, திருவாட்டி டியோ, அப்போது அவரது வயது 19, ஆகிய மூவரும் தாங்கள் படித்த லசால்லில் விருந்து நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ரகில் தங்கியிருந்த வீட்டுக்குத் திரும்பினர்.

வீட்டில் மூவரும் எக்ஸ்டசி போதை மாத்திரையை எடுத்துக் கொண்டதாக அஹமட் தெரிவித்து உள்ளார். அதிகாலை 6.00 மணி யளவில் காரணம் தெரியாமலே ஃபெலிசியா இறந்துவிட்டார். அதன் பிறகு ஃபெலிசியாவின் உடலை எடுத்துச் சென்று இருவரும் எரித்து விட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!