கொவிட்-19 நோயால் பாதிக்கப்படாதவர்களுக்கு 'எக்ஸ்பிபி' அலையால் கூடுதல் பாதிப்பு

கொவிட்-19 நோயால் பாதிக்கப்படாதவர்களுக்கு 'எக்ஸ்பிபி' அலையால் கூடுதல் பாதிப்பு

1 mins read
575a50c3-9d27-4d9b-90d8-27cf863926ef
-

இதுவரை கொவிட்-19 தொற்று ஏற்படாதவர்களுக்கு அல்லது 2021ஆம் ஆண்டு டெல்ட்டா அலைக்கு முன்பாக கொவிட்-19 நோய் தொற்றியவர்களுக்கு தற்போதைய 'எக்ஸ்பிபி' அலையால் பாதிப்பு ஏற்படும் சாத்தியம் அதிகம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

டெல்டா அலை சிங்கப்பூரில் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் உச்சத்தைத் தொட்டது.

இந்நிலையில் இதுவரை கொவிட்-19 நோயால் பாதிக்கப்படாதவர்களுக்கு இம்முறை கொவிட்-19 பாதிப்பு ஏற்படும் சாத்தியம் அதிகம் என்று அமைச்சு சொன்னது.