சுகாதார அமைச்சர் வெளியிட்ட முக்கிய நான்கு நெறிமுறைகள்

சுகாதார அமைச்சர் வெளியிட்ட முக்கிய நான்கு நெறிமுறைகள்

1 mins read
981b7b68-aa47-4b7a-923c-a63a33645e77
-

சிங்­கப்­பூ­ரில் எக்ஸ்­பிபி உரு­மா­றிய கிருமி அலை தலை­தூக்­கு­கிறது. கொவிட்-19 கிரு­மி­யு­டன் வாழ­வேண்­டிய சூழ்­நி­லை­யில் சிங்­கப்­பூர் இருக்­கிறது.

இந்த நிலை­யில், சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நான்கு மிக முக்­கிய வழி­காட்டி நெறி­முறை­களை வெளி­யிட்டுள்ளார்.

தடுப்­பூ­சியைத் தொடர்ச்­சி­யாகப் போட்­டுக்­கொண்டு வாருங்­கள். 50 வயதைக் கடந்­த­வர்­கள் மூன்று தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக் கொண்டி­ருக்­கும் பட்­சத்­தில் அல்லது கடைசி ஊசியைப் போட்டுக்­கொண்டு ஐந்து மாதங்­களுக்கு மேல் ஆன­வர்­கள், மொடர்­னா­வின் ஸ்பைக்­வேக்ஸ் இரு ஆற்­றல் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள வேண்­டும்.

தேவைப்­படும் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டால் கிருமி தொற்­றி­னா­லும் கடும் பாதிப்பு இருக்­காது என்றார் அவர்.

சில பாது­காப்பு நட­வ­டிக்கை­களை மீண்­டும் தொடங்க வேண்­டிய வாய்ப்பு இருக்­கும் என்­பதை இரண்­டா­வது வழி­காட்டி நெறி­முறை­யாக அவர் அறி­வித்­தார்.

கொவிட்-19 சூழ்­நிலை மோச­மடைந்­தால் உட்­பு­றத்­தி­லும் வெளிப்­பு­றத்­தி­லும் முகக்­க­வ­சம் அணி­வது, தடுப்­பூசி அடிப்­ப­டை­யி­லான வேறு­பாட்டு நடை­மு­றை­களை அமல்­ப­டுத்­து­வது போன்­ற­வற்றுக்குத் தேவை ஏற்­ப­டக்­கூ­டும் என்­று அமைச்சர் கூறினார்.

கொரோனா அலை தலை­தூக்­கும்­போது மருத்­து­வ­ம­னை­களுக்குச் செல்­லும் வரு­கை­யா­ளர்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வது மூன்­றா­வது நெறி­முறை.

நான்­கா­வ­தாக ஒவ்­வொ­ரு­வரும் அவ­ர­வர் பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும்; உடல்­நி­லை சரி­யில்லை என்­றால், முதியோரோடு வசித்து வந்­தால் முகக்­க­வ­சம் அணிந்­து­கொள்ள வேண்­டும்;

உடல்­நிலை சரி­யில்லை என்­றால் பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டும்; தனி­மைப்­படுத்­திக்­கொள்ள வேண்­டும்;

கொரோனா கிருமி தொற்­றி­னால் தேவை­யான நிபந்­த­னை­களுக்கு உட்­பட்டு நடந்­து­கொள்ள வேண்­டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.