சிங்கப்பூரில் இதுவரையில் கொவிட்-19 கிருமி தொற்றுக்கு ஆளாகாதவர்கள் அல்லது 2021ல் டெல்டா கிருமி அலை தலைஎடுத்ததற்கு முன்பாக தொற்றுக்கு ஆளானவர்கள் யாராவது இருந்தால் அவர்களுக்கு எக்ஸ்பிபி கிருமி தொற்றும் வாய்ப்பு அதிகம் என்பது தெரியவந்து இருக்கிறது.
கொவிட்-19 தொற்று இதுவரை ஏற்படாதவர்கள் மற்றவர்களைவிட புதிய தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம் என்பது சுகாதார அமைச்சின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருவதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது.

