நார்த் பிரிட்ஜ் ரோட்டில் செயல்படும் சிங்கப்பூர் ஸம் ஸம் உணவகத்தின் முன்னாள் இயக்குநரான ஸக்கீர் அப்பாஸ் கான், 52, இப்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
அந்தக் கடைக்குப் பக்கத்தில் செயல்பட்ட விக்டரி என்ற போட்டி உணவகத்தின் மேற்பார்வையாளர் மீது 2015ல் நடந்த தாக்குதலுக்கு காரணகர்த்தாவாக ஸக்கீர் இருந்ததாக தெரியவந்தது.
அதையடுத்து அவர் இப்போது தண்டனை அனுபவித்து வருகிறார். அவருக்கு எதிராக மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்து வந்தன.
மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மூர்க்கமான செயலைச் செய்தது; மிரட்டியது ஆகியவை தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் முன்னதாக விசாரணை கோரி இருந்தார்.
இந்த நிலையில், ஸக்கீர் அந்த இரண்டு குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டு இருக்கிறார். ஆனால், அவரை குற்றமற்றவர் என்று நீதிமன்றம் விடுவிக்கவில்லை. புதிய சாட்சியம் தெரியவரும்போது அவர் மீது வழக்குத் தொடுக்க முடியும்.

