பிரதமர் ஆஸ்திரேலியா பயணம்

பிரதமர் ஆஸ்திரேலியா பயணம்

1 mins read
e7f0e551-4442-472a-8310-5ac7b7b60a18
-

பிர­த­மர் லீ சியன் லூங் இன்­றி­லிருந்து மூன்று நாள் வருகை மேற்­கொண்டு ஆஸ்­தி­ரே­லியா செல்­கி­றார். அவர், ஆஸ்­தி­ரே­லிய பிர­த­மர் ஆண்டனி அல்­ப­னிசை சந்­தித்­துப் பேச்சு நடத்­து­வார்.

இரு தலை­வர்­களும் ஏழா­வது சிங்­கப்­பூர்-ஆஸ்­தி­ரே­லியா வரு­டாந்­திர தலை­வர்­கள் கூட்­டத்­தில் இருதரப்பு ஒத்­து­ழைப்பு பற்றி விவா­திப்­பார்­கள்.

வட்­டார, உலக நில­வ­ரங்­கள் பற்றி கருத்­து­க­ளைப் பரஸ்­ப­ரம் பகிர்ந்­து­கொள்­வார்­கள் என்று பிர­த­மர் அலு­வ­ல­கம் கூறியது.

பிர­த­ம­ரு­டன் திரு­வாட்டி லீ, வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன், வர்த்­தக, தொழிலமைச்­சர் கான் கிம் யோங் உள்­ளிட்­டோர் உடன் செல்­வர்­.

பிர­த­மர் வெளி­நாடு சென்­றிருக்­கை­யில், துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் தற்­கா­லி­கப் பிர­த­ம­ராக பொறுப்­பேற்­பார்.