அதிபர் ஹலிமா வியட்னாம் பயணம்

அதிபர் ஹலிமா வியட்னாம் பயணம்

1 mins read
426f3d3b-7e3a-41bf-aa92-c4c68a5a7735
-

அதிபர் ஹலிமா யாக்கோப், வியட்னாம் அதிபரின் அழைப்பின்பேரில் இன்று முதல் அந்த நாட்டுக்கு ஐந்து நாள் அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்கிறார்.

வியட்னாம் அதிபர் நுயன் ஸுவான் புக்கை சிங்கப்பூர் அதிபர் சந்திப்பார்.

சிங்கப்பூர் தலைவருக்கு வியட்னாம் அதிபர் விருந்தளித்துச் சிறப்பிப்பார் என்று வெளியுறவு அமைச்சு நேற்று தெரிவித்தது.

இந்தப் பயணம், இரு நாட்டு நெடுநாள் உறவை மறு உறுதிப்படுத்துவதாகவும் அமைச்சு கூறியது.

இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த இரு நாடுகளும் கொண்டிருக்கும் உறுதியை எடுத்துக் காட்டுவதாகவும் இந்தப் பயணம் அமைகிறது.